Published : 25 Aug 2019 07:40 AM
Last Updated : 25 Aug 2019 07:40 AM

வனப் பகுதிகளில் சுரண்டப்படும் கனிம வளங்கள்; இஸ்ரோ உதவியுடன் மணல் எடுப்பதை கண்காணித்து தடுக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப் பட்டுள்ள புதிய ஆராய்ச்சிக் கூடத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

கோவை

வனப்பகுதிகளையொட்டிய பகுதிகளில் மணல் எடுப்பதை இஸ்ரோ வரைபட உதவியுடன் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் ஆனைக் கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப் பட்டுள்ள புதிய ஆராய்ச்சி கூடத்தை நேற்று திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

செயற்கை உரங்கள், வேதிப் பொருட்களால் பறவைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை கண்டறிந்து களைய, சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கூடம் உதவும்.

கழுகு இனம் குறைவு

மேலும், கழுகு இனம் குறைந் துள்ளதை கண்டறிவதற்கும், இப்பிரச்சினையில் கவனம் செலுத்தவும், தீர்வுகளை காணவும் உதவும். தற்போது, இரட்டிப்பாகி யுள்ள புலிகளின் பெருக்கம், 2023-க்குள் மேலும் அதிகரிக்கும்.

வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவன வசதியை ஏற்படுத்த, பல ஆண்டுகளாக வழங்கப்படாத நிதியை அனைத்து மாநிலங்களுக் கும் நடப்பு ஆண்டு வழங்க உள்ளோம்.

இதன்மூலமாக வன விலங்குகள் ஊருக்குள் புகு வதும், மனித-விலங்கு மோதலும் குறையும். மேலும், வனத்தை யொட்டி இருக்கும் பகுதிகளில் கனிம வளங்கள் சுரண்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாக இருக் கிறது.

எனவே, மணல் எடுப்பதை இஸ்ரோ உதவியுடன் வரைபடம் மூலமாக கண்காணிக்க திட்டமிட் டுள்ளோம். இதன்மூலம் மணல் கொள்ளை, திருட்டு தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x