Published : 25 Aug 2019 07:37 AM
Last Updated : 25 Aug 2019 07:37 AM

நாளொன்றுக்கு 1,000 பேருக்கு சேவை; சென்னையில் அமைகிறது நவீன ஆதார் சேவை மையம்: சில தினங்களில் திறக்க யுஐடிஏஐ திட்டம்

ச.கார்த்திகேயன்

சென்னை

நாளொன்றுக்கு 1,000 பேருக்கு சேவை அளிக்கும் வகையில் நவீன ஆதார் சேவை மையத்தை சென் னையில் சில தினங்களில் திறக்க இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சேவைகளை பெறுவதற் காக ஆதார் மூலமாக ‘உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் (eKYC)’ படிவத்தை வழங்குவது பொதுமக்களுக்கும் எளிதாக உள் ளது.

தொடக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் சரியான பயனாளியை மட்டும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆதார் எண்ணை பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறி வந்தது. பின்னர் மெல்ல மெல்ல வருவாய் ஈட்டும் எண்ணாக அது மாறிவிட்டது.

நாடு முழுவதும் இதுவரை 120 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 7 கோடியே 17 லட்சம் பேர் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளனர். கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 29 கோடி ஆதார் திருத்தங்களும், 74 கோடி இ.கே.ஒய்.சி சரிபார்ப்புகளும் நடைபெற்றுள்ளன. ஆதார் திருத்தம் மற்றும் தொலைந்துவிட்டால் புதிய ஆதார் அட்டை பெற தலா ரூ.50, ஆதார் எண் தேடலுக்கு ரூ.30, இ.கே.ஒய்.சி. சரிபார்ப்புக்கு ரூ.20 (அரசுத் துறைகள் நீங்கலாக) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் மூலம் ஆதார் வழங்கி வரும் யுஐடிஏஐ நிறுவனம் பல கோடி வருவாய் ஈட்டி வருகிறது.

நாடுமுழுவதும் யுஐடிஏஐ அனுமதியுடன் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் சேவை மையங் கள் இயங்கி வரும் நிலையில், தற்போது யுஐடிஏஐ நிறுவனமே நேரடியாக ஆதார் பதிவு, திருத்தங்களை மேற்கொள்ள ஆதார் சேவை மையங்களை திறந்து வருகிறது.

ஏற்கெனவே டெல்லி, ஆந்திர மாநிலம் விஜயவாடா, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா, ஹரி யாணா மாநிலம் ஹைசர் ஆகிய 4 இடங்களில் ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 53 நகரங்களில் மொத்தம் 114 மையங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சில தினங்களில் சென்னையில் ஆதார் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. அதற் கான இடம் கோயம்பேடு பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென் னையில் மேலும் பல இடங்களில் இதைத் திறக்கும் திட்டமும் உள் ளது.

தமிழக அரசு முகமைகள் நடத்தி வரும் மையங்களை போன்று அல்லாமல், இந்த மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் நடைமுறை எளிதாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இம் மையத்துக்கு வரும் நபர் முதலில் டோக்கன் பெறவேண்டும். பின்னர் ஆவணங்களை பரிசோதிப்பவரிடம் செல்ல வேண்டும். தகுதியான ஆவணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின், அதற்கான கட்டணத்தை செலுத்தும் கவுன்ட்ட ருக்கு அனுப்பப்படுவார். அங்கு கட்டணத்தை செலுத்திய பின், விவ ரங்கள் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்யும் ஆபரேட்டரிடம் அனுப்பி வைக்கப்படுவார்.

இவ்வாறு செய்வதன் மூலம், உரிய ஆவணங்கள் கொண்டு வராதவர்கள், ஆரம்பத்திலேயே திருப்பி அனுப்பப்படுவதால், அதிகமான நபர்களுக்கு சேவை வழங்க முடியும் என யுஐடிஏஐ நிறுவனம் கூறுகிறது.

இந்த மையம் முழுவதும் குளி ரூட்டப்பட்டு இருக்கும். 16 ஆப ரேட்டர்களைக் கொண்ட கவுன்ட் டர்கள், பொதுமக்கள் காத்திருக்க 80 இருக்கைகள், சேவையை பெற மின்னணு டோக்கன் வழங்கும் இயந்திரம் ஆகியவை இருக்கும். பொதுமக்கள் ஆன்லை னில் தங்களுக்கு ஏற்ற நேரத்தை முன்பதிவு செய்துகொண்டு வர வும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இம்மையம், நாளொன்றுக்கு 1,000 ஆதார் பதிவுகள் மற்றும் திருத்தங்களை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். வாரத் தில் ஞாயிற்றுக்கிழமை உட்பட 6 நாட்கள் இயங்கும். செவ்வாய்க் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இயங்காது என யுஐடிஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x