Published : 24 Aug 2019 10:06 AM
Last Updated : 24 Aug 2019 10:06 AM

தொடரும் பல்வேறு சம்பவங்களால் கோவையில் ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்திய உளவுப் பிரிவு போலீஸார்

டி.ஜி.ரகுபதி

கோவை

கோவை மாநகரில் ரகசிய கண்காணிப்பை உளவுப் பிரிவு காவல்துறையினர் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாவட்டமாக கோவை உள்ளது. கல்வி, மருத் துவம், தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காக கோவைக்கு வந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர் கோவைக்கு வந்து சென்றதாக வெளியான தகவல், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை, தடை செய் யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் கைது, தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் ஆதரவாளர் கைது, தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடத்த திட்டமிட்ட 3 இளைஞர்கள் கைது என, கடந்த சில மாதங்களாக கோவையில் நடக்கும் நிகழ்வுகள் மாநில, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

மேற்கண்ட நிகழ்வுகள்போல பரபரப்பான முக்கிய நிகழ்வுகள் கடந்த சில வாரங்களாக கோவை யில் எதுவும் இல்லாத நிலையில், ‘தீவிரவாதிகள் ஊடுருவல், கோவை யில் காவல்துறையினர் அலர்ட்’ என்ற தகவல் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் வீட்டிலிருந்து வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு நேற்று வெளியே புறப்பட்ட மக்கள், சாலை களின் முக்கிய இடங்களில் காவல் துறையினரின் வாகன தணிக்கை நடப்பதை கண்டும், மாநகரின் தற்போதைய நிலையை உணர்ந் தும் நிச்சயம் அச்சமடைந்திருப்பர்.

மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கூறும்போது, ‘‘தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக கிடைத்த எச்சரிக்கை தகவலையடுத்து நடக் கும் வழக்கமான சோதனைதான். பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை'’ என்றார்.

கோவையில் முன்னரே காவல் துறையினரின் வெளிப்படையான கண்காணிப்பு மற்றும் சிறப்பு உளவுப் பிரிவுகளின் ரகசிய கண்காணிப்பு தீவிரமாக உள்ளது. இந்த சம்பவங் களையடுத்து, மாநகரில் ஐ.எஸ்., எஸ்.ஐ.சி., எஸ்.ஐ.யூ. கியூ பிரிவு, ஐ.பி. போன்ற உளவுப் பிரிவினர், தங்களது கண்காணிப்பை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல், மாவட்ட பகுதியிலும் கண் காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல் துறை உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் வழக் கத்தைவிட, தற்போது கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. குறிப்பாக, சர்ச்சைக்குரிய, பதற்றம் நிறைந்த, இருதரப்பு மோதல்கள் அடிக்கடி நடக்கும் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளிலுள்ள தொடர் கண்காணிப்பில் உள்ள நபர்களின் செயல்பாடுகள், புதிதாக அங்கு வரும் சந்தேகத்துக்குரிய நபர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இதுதவிர, கடந்த சில மாதங் களாக சிறையில் இருந்து பரோலில் வரும் நபர்கள், குற்ற வழக்கு களில் கைதாகி பிணையில் வரும் நபர்களின் செயல்பாடுகளும் தீவிர மாக கண்காணிக்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x