Published : 24 Aug 2019 10:03 AM
Last Updated : 24 Aug 2019 10:03 AM

அத்திவரதர் ஜலசயனம் கொண்டுள்ள அனந்தசரஸ் குளத்தை காண மக்கள் ஆர்வம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் ஜல சயனம் செய்யும் அனந்தசரஸ் குளத்தைச் சுற்றியிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. குளத்துக்குள் பக்தர்கள் இறங்க தடை விதிக்கப் பட்டுள்ளதால் சுவாமி ஜலசயனம் செய்யும் பகுதியை மக்கள் பலர் தினந்தோறும் கரைமீது நின்றவாறு ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நடவாவியில் அத்திவரதர் கடந்த 40 ஆண்டுகளாக சயனத் தில் இருந்தார். அவர் வசந்த மண்ட பத்தில் ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை சயன கோலத்திலும், ஆக.1 முதல் 17 வரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர் கள் வந்து அத்திவரதரை தரிசித்த னர். பின்னர் ஜூலை 17-ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்துக் குள் அத்திவரதர் ஜலசயனம் செய்யப்பட்டார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்துக்குள் இறங்கிச் செல்வதை தடுக்கும் வகையில் சுற்றிலும் இரும் பாலான தடுப்புகள் அமைக்கப்பட் டிருந்தன. இதனால் அத்திவரதர் ஜலசயனம் செய்யும் பகுதியை பக்தர்கள் பார்க்க முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் அனந்த சரஸ் குளத்தைச் சுற்றி இருந்த இரும்பு தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் தினம்தோறும் கோயிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் ஜலசயனம் செய்யும் இடத்தை குளக்கரையில் இருந்து பார்த்து வருகின்றனர்.

குளத்தில் குறைவான தண்ணீர்

அத்திவரதர் குளத்துக்குள் ஜலசயனம் செய்யும் நடவாவி பகுதியில் மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது. அனந்தசரஸ் குளத்தில் குறைவான தண்ணீரே உள்ளது. குளத்துக்குள் குறைவான அளவே தண்ணீர் இருப்பதால் பக்தர்கள் அத்திவரதரை காணும் ஆர்வத்தில் தடையை மீறி உள்ளே இறங்கும் ஆபத்தும் உள்ளது.

எனவே, ஏற்கெனவே அந்த குளத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டு பொற்றாமரை குளத்தில் விடப்பட்ட தண்ணீரை மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்ட போது, "ஏற்கெனவே அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட தண்ணீர் மீண்டும் அந்த குளத் துக்குள் விட முடியாது. ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து அதை குளத்துக்குள் விடும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x