Published : 24 Aug 2019 08:59 AM
Last Updated : 24 Aug 2019 08:59 AM

மத்திய அரசின் ‘மேக் இந்தியா’ திட்டத்தில் 150 அதிவேக ரயில் இன்ஜின்கள் தயாரிக்கும் பணி தொடக்கம்: மணிக்கு 200 கி.மீ வேகம் செல்லும் திறன் பெற்றிருக்கும்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

மத்திய அரசின் ‘மேக் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே துறையில் 150 அதிவேக ரயில் இன்ஜின்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை ரயில் இன்ஜின்கள் மணிக்கு 200 கி.மீ வேகம் செல்லும் திறன் கொண்டது.

உலகின் 4-வது பெரிய நிறுவனமான இந்திய ரயில்வே துறை மூலம் இயக்கப்படும் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பெரும்பாலான விரைவு ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் செல்கின்றன. ரயில்களின் வேகத்தைக் கூட்ட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய ரயில்வேயின் மொத்த பாதைகளில் 16 சதவீதம் தங்க நாற் கர பாதைகளில் அமைந்துள்ளது. இந்த பாதைகளில்தான் 52 சதவீத பயணிகள் ரயில்களும், 58 சதவீத சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின் றன. இந்தத் தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டிய தேவை இருப்பதால், அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, புது டெல்லி - மும்பை, புதுடெல்லி - கொல்கத்தா, சென்னை - மும்பை, மைசூர் பெங்களூரு உள்ளிட்ட தடங்களில் இருக்கும் பாதைகளில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான தண்டவாளங் கள், சிக்னல் அமைப்பு போன்ற கட்டமைப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் அதிவேகமாகச் செல்வதற்கு ஏற்ற இணைப்பு பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலை களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக அதிவேக ரயில் களுக்கான இன்ஜின்கள் தயாரிக் கும் பணிகளில் ரயில்வே கள மிறங்கியுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘புதுடெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அதி வேக ரயில்களின் தேவை அதிகரித் துள்ளது. அதிவேக ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ வேகத்தில் செல்லும். தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்குவதற்கான தண்டவாளங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த பாதைகளில் பாதையோரம் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகளும், ரயில்வே கேட்களுக்கு மாற்றாக மேம் பாலங்கள் அல்லது கீழ்பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த வகை ரயில் களுக்கான இன்ஜின்களை (டபுள்யு.ஏ.பி-5) தயாரிக்கும் பணியை ரயில்வே தொடங்கியுள் ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் ரயில் இன்ஜின் தொழிற் சாலையில் இந்த ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் தயாரிக்கப்பட்ட ஒரு இன்ஜின் சோதனை முயற்சியாக இயக்கப்பட்டு, தற்போது கதி மான் அதிவேக ரயிலில் வெற்றிகர மாக இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசின் ‘மேக் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிவேக இன்ஜின்கள் தயாரிக் கும் பணி தற்போது தொடங்கப்பட் டுள்ளது. வரும் 2021-க்குள் ஆண் டுக்கு 50 என மொத்தம் 150 அதி வேக இன்ஜின்கள் தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது’’ என்றனர்.

பணிகளை துரிதப்படுத்த..

இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் மனோ கரன் கூறுகையில், ‘‘புல்லட் ரயில் திட்டத்துக்கு அதிகமாக நிதி செல வாகும். இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாடுகளில் பெரும் பாலான மக்களையும் கவரும் வகையிலான ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் சிறந்தது. பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஹங்கேரி போன்ற நாடுகளில் ரயில் பாதைகளை மேம்படுத்தி மணிக்கு 200 கி.மீ செல்லும் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுபோன்ற அதிவேக ரயில்கள் திட்டத்தை இந்தியாவிலும் செயல் படுத்த வேண்டும். 2023-ம் ஆண் டில், அதிவேக ரயில்களின் எண்ணிக் கையை 60 என்ற இலக்கைப் பெறும் வகையில் இத்திட்டங்களுக்கு மத் திய அரசு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x