Published : 24 Aug 2019 08:52 AM
Last Updated : 24 Aug 2019 08:52 AM

நேரடி நெல் விதைப்பு முறையை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம்: பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் 

சென்னை

விவசாயிகள் பாசன நீரை சிக்கன மாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையை மேற்கொள்ள உதவியாக ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் 43 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரை ஆதாரமாக கொண்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடப்பு பருவத்தில் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13-ம் தேதியும், கல்லணையில் இருந்து 17-ம் தேதியும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கேட் டுக் கொள்ளப்படுகின்றனர். நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும் போது பெருமளவு தண்ணீர் சேமிக்கப்படு கிறது. அத்துடன், நெற்பயிரும் 10 முதல் 15 நாட்களுக்கு முன்ன தாகவே அறுவடைக்கு தயாராகி விடும்.

இதை முன்னெடுத்து செல்வதற் காக சிஆர் 1009, சிஆர் 1009 சப் 1, கோ 50, ஏடிடி 50, டிகேஎம் 13 போன்ற நெல் ரகங்களின் விதைகளை போதுமான அளவு இருப்பு வைக்க வேளாண் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்கு விக்க, ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்கப்படும். அதன்படி 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், மானியம் வழங்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பாசன வசதி துணையுடன் நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட விவசாயிகளும் உழவு மானியத்தை பெற்று நீரை சேமித்து அதிக விளைச்சல் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x