Published : 24 Aug 2019 08:42 AM
Last Updated : 24 Aug 2019 08:42 AM

சென்னையில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய மீட்டர் பொருத்தி பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும்: மாநில திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் வலியுறுத்தல்

சென்னை

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்வீடன் அலுமினி நெட்வொர்க் இந்தியா அமைப்பு சார்பில் 'சென்னையில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய் வதற்கான நீடித்த நிலையான தீர்வை நோக்கி' என்ற தலைப்பில் கருத்தரங்கம், தரமணியில் உள்ள அறக்கட்டளை அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் அறக் கட்டளை நிறுவனர் எம்.எஸ்.சுவாமி நாதன் பங்கேற்று, கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில திட் டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் சாந்தஷீலா நாயர் பேசிய தாவது:

சென்னையில் வரும் 2026-ம் ஆண்டு மக்கள்தொகை பெருமளவு அதிகரிக்கும். அதற்கு ஏற்ற வாறு நீர் தேவை அதிகரிக்கும். சென்னைக்கு ஆண்டுதோறும் போதுமான மழை கிடைக்கிறது. அதை முறையாக மேலாண்மை செய்யாததால் சிக்கல் ஏற்படுகிறது.

முதலில் கையிருப்பில் உள்ள நீரைக் கொண்டு, மொத்த தேவையை பூர்த்தி செய்வதற் கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். அதை முறைப்படுத்த குடிநீர் விநியோகத் தில் மீட்டர்களை பொருத்த வேண் டும். பொதுமக்களின் பயன் பாட்டுக்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுவது போன்று குடிநீர் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். குறைவாக பயன்படுத்தும் பொது மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த முன்வரு வார்கள். அப்போது தான் சென் னையில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

குழாயில் வரும் நீரின் அளவை குறைத்து, தேவையை முழுமை யாக பூர்த்தி செய்யும் ஏரேட்டர், கழிவறையில் குறை வான நீரை செலவிடும் பல உபகர ணங்கள் சந்தையில் உள்ளன. அவற்றை பயன்படுத்து மாறும் பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தலாம்.

1800 கி.மீ. மழைநீர் வடிகால்

சென்னையில் 5 ஆயிரத்து 400 கி.மீ. நீளத்தில் சாலைகள் உள்ளன. அதில் தற்போது 1800 கி.மீ. நீளத் துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப் பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, உயர் கடல் அலைகளால் வெள்ள நீர் கடலுக்குள் செல்லவில்லை. மழை நீர் வடிகாலில் உள்ள நீரும் வெளியேறவில்லை. அவற்றில் பல நாட்கள் கழிவுநீர் தான் ஓடுகிறது. பயனில்லாத கட்டமைப்பாக மழைநீர் வடிகால் உள்ளது.

இவற்றில் 50 மீட்டர் இடைவெளி யில் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்தினாலே, நிலத்தடி நீர் மட்டம் உயரும். அப்படி செய் தால், இப்போது உள்ள மழைநீர் வடிகாலில் 38 ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும். மொத்தமுள்ள சாலை களில் அமைப்பதாக இருந்தால் 1 லட்சத்து 8 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற் படுத்த முடியும்.

இவ்வாறு சாந்தஷீலா நாயர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஸ்வீடன் அலுமினி நெட்வொர்க் இந்தியா அமைப் பின் தமிழக பிரிவு செய லர் ஏ.ராஜகோபால், அறக்கட்ட ளையின் வேளாண்மை, சத்துணவு, சுகாதாரத் துறை இயக்குநர் ஆர்.வி.பவானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x