

சென்னை
நாட்டின் மொத்த உணவு பதப்படுத் துதல் தொழிலில் தமிழகத்தின் பங்கு 7 சதவீதமாக உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் உணவு பதப்படுத்து தல் குறித்த 3 நாள் சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங் கின் தொடக்க விழா சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத் தில் நேற்று நடைபெற்றது. சிஐஐ தென்மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்தனலு விழாவுக்குத் தலைமை தாங்கினார். சிஐஐயின் கண்காட்சித் தலைவர் நவாஸ் மீரான் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சி, கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆளுநர் பேசுகையில், “தென்மண்டலத்தில் உள்ள உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை கள், நாட்டின் மொத்த உற்பத்தி யில் 9 சதவீதத்தை தங்களுடைய பங்களிப்பாக அளிக்கின்றன. உணவு பதப்படுத்துதலில் பால் பொருட்கள் உற்பத்தி முக்கியமாக உள்ளது புதிதாக வரும் தொழில் முனைவோருக்கு மத்திய அரசு அதிக உதவிகளைச் செய்கிறது. நாட்டில் உள்ள உணவு பதப்படுத்து தல் தொழிலில் தமிழகத்தின் பங்கு 7 சதவீதமாக உள்ளது” என்றார்.
உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசுகையில், “உலக அளவில் அரிசி, எண்ணெய், கோதுமை உற்பத்தியில் 2-ம் இடம் பெற்றுள்ளோம். தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் இந்தியா முழு வதும் செயல்படுத்தப்படுகிறது” என்றார்.
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ராமேஸ் வர் டெலி பேசுகையில், “உணவுத் துறையில் தமிழகத்தில் 3 திட்டங் கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 9 திட்டங்களுக்கான பணி நடை பெற்று வருகிறது. அனைத்து மாநிலத்திலும் உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது” என்றார்.