Published : 24 Aug 2019 08:38 AM
Last Updated : 24 Aug 2019 08:38 AM

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு

சென்னை

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகளுக்கு ரூ.2,371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனி சாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அடையாறு மற்றும் கூவம் நதி களுக்கான சுற்றுச்சூழல் சீரமைப் புத் திட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. கூவம் அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் இதனைச் சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்போதுள்ள சென்னை கழிவுநீர் கட்டமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 371 கோடியில் செயல்படுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்ட அரசாணை:

அடையாறு, கூவம், பக்கிங் ஹாம் கால்வாய் பகுதியில் 46 அதி நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் நிறுவ ரூ.412 கோடியே 39 லட்சம் ஒதுக்கப்பட் டுள்ளது. இதுதவிர கழிவுநீரை சேகரிக்கும் பகுதியை விரிவாக்கு தல் கழிவுநீர் பம்பிங் நிலை யத்தை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.587 கோடியே 61 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இப் பணிகள் அனைத்தும் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண் டும். இப்பணிகள் 2 கட்டமாக மேற் கொள்ளப்படுகின்றன. இதன்கீழ், மொத்தமுள்ள 220 கி.மீ கழிவுநீர் பாதைகளில் 80 கி.மீ பாதை ரூ.300 கோடியில் விரிவாக்கப்படு கிறது. மொத்தமுள்ள 3,309 கி.மீ நீள கழிவுநீர் சேகரிப்பு அமைப்பு களில் 600 கி.மீ நீள அமைப்பு களை புனரமைக்க ரூ.1,010 கோடி யும், சென்னையில் உள்ள 266 சாலை யோர கழிவுநீர் பம்பிங் நிலையங் களை புனரமைக்க ரூ.60 கோடியும் ஒதுக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x