Published : 24 Aug 2019 08:18 AM
Last Updated : 24 Aug 2019 08:18 AM

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள்: அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு சிக்கல்

சி.பிரதாப்

சென்னை

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெட் தேர்வில் இருந்து விலக்களித்து உயர்நிலைப் பள்ளி களில் பணியமர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல் தான் நடை முறைக்கு வந்தது.

ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற 2019 மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அந்த காலக்கெடுவும் கடந்த மார்ச் மாதத் துடன் முடிந்துவிட்டதை அடுத்து தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத சுமார் 17 ஆயிரம் ஆசிரியர் கள் வேலை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவர்களுக்கு இறுதி வாய்ப்பாக டெட் தேர்வு கடந்த ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. அதுவரை அவர்கள் பணி யில் தொடரவும் தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் டெட் தேர்வில் ஒரு சத வீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளி களில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதியதில் 80-க்கும் குறைவான வர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். இத னால் மீதமுள்ளவர்களின் வேலைக்கு சிக்கல் எழுந்துள்ளது. மேலும், டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இந்த மாதத்துடன் பணியில் இருந்து நின்றுவிட தனியார் பள்ளிகள் நிர்வாகங்கள் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தங்கள் வாழ்வாதாரம் கருதி தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன் கூறும்போது, ‘‘ஆசிரியர்கள் பல ஆண்டு களாக பள்ளிகளில் திறம்பட பணியாற்றி பல்வேறு மாணவர்கள் வாழ்வுக்கு வழிகாட்டி உள்ளனர்.

வகுப்பறையில் ஒரே பாடத்தை நடத்தி விட்டு அனைத்துப் பாடங்களையும் தகுதித் தேர்வில் எழுதுபோது சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. தேர்வுக்கு தயாராக அவர் களுக்கு போதுமான அவகாசமும் இல்லை. டெட் வினாத்தாளும் மிகவும் கடினமாக இருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்து ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில் டெட் தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்களிக்க வேண்டும்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள்தான் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 9, 10-ம் வகுப்பு ஆசிரியர்களை கல்வித்தகுதியின்படி நேரடி யாக பணிநியமனம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதுபோல பிரத்யேக போட்டித் தேர்வு நடத்த வேண்டும்.

ஆனால், பட்டதாரி ஆசிரியருக்கு ஒரே கல்வித்தகுதி என்பதால் 6 முதல் 10-ம் வகுப்பு வரை டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் களை அரசு பணிநியமனம் செய்துவருகிறது. எனவே, இப்போது அரசு உதவிபெறும் பள்ளி களில் டெட் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கலாம். இது மத்திய அரசின் விதிமீறலாகாது’’என்றார்.

மறுபுறம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 சதவீத அள வுக்கு தேர்ச்சி இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், தேர்வு முடிவுகள் ஒரு சதவீதம்கூட இல்லாததது வருத்தமளிக்கிறது.

தற்போது டெட் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் விவரங்கள் மாவட்டவாரியாக சேகரிக்கப்பட்டு வருகின் றன. மத்திய அரசின் உத்தரவின்படி டெட் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் வைத்தி ருக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோ சனை செய்துவருகிறோம். விலக்கு அளிப் பதைவிட பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு நடத்த அரசிடம் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதில் அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x