

ராமேசுவரம்
புயல் தாக்கி 54 ஆண்டுகளுக்குப் பிறகு, தனுஷ்கோடியில் ரூ.208 கோடி மதிப்பில் உருவாக உள்ள புதிய ரயில் பாதையை, சென்னை ஐஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை - தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964 டிச.17-ல் அந்தமான் கடல் பகுதி யில் காற்றழுத்த தாழ்வுநிலை உரு வானது. அது புயலாக உரு வெடுத்து, டிச.22-ல் தனுஷ் கோடிக்குள் புகுந்தது. இதனால் ரயில் நிலையத்திலும், துறைமுகத் திலும் இருந்த ஏராளமான மக்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள், அம்மன் கோயில், தேவாலயம், முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் தரை மட்டமாயின. அப்போது தந்தி மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், வெளி உல கத்துக்கும் ராமேசுவரத்துக்கும் இடையே தகவல் தொடர்பு துண்டிக் கப்பட்டது. இதனால் சேத விவரம் உடனடியாக சென்னைக்குத் தெரிய வில்லை.
பின்னர், அவர்களைக் காப் பாற்ற கப்பல்கள், இயந்திரப் படகு கள், ஹெலிகாப்டர், விமானங்கள் ராமேசுவரம் நோக்கி விரைந்தன. பாதிக்கப்பட்டோருக்கு விமானத் தில் இருந்து உணவுப் பொட் டலங்கள் வழங்கப்பட்டன. புயலில் தப்பியவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகத்தில் பல இடங் களில் இருந்தும் உடனடியாக மருத் துவர்கள் ராமேசுவரத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இறுதியில் தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய ஒரு வார காலம் ஆனது. கடற்கரை முழுவதும் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான சடலங்கள் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டன.
பிரதமர் மோடி அடிக்கல்
புயல் தாக்கி 54 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ்கோடிக்கு ராமேசுவரத்தில் இருந்து 17.20 கி.மீ தொலைவுக்கு ரூ.208 கோடியில், புதிய ரயில் பாதை அமைப்பதற்காக கடந்த மார்ச் 1-ல் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொ லிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி னார்.
இதற்காக ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தின் மூலம் சர்வே நடந்தது. இந்த வழித்தடத்தில் ஜடாயு தீர்த்தம், கோதண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.
இந்தத் திட்டத்தை விரைவி லேயே தொடங்கவும் முடிவு செய் யப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடி அதிகாரிகள் ராமேசுவரம் ரயில் நிலையம் முதல் கரையூர், ஜடாமகுட தீர்த்த கோயில், முகுந்த ராயர் சத்திரம் வழியாக தனுஷ் கோடி வரை பழைய ரயில் பாதை சென்ற வழித்தடத்தில் ரயில்வே நிலத்தை ஆய்வு செய்து வரு கின்றனர்.
ரயில்வே பாதையில் பல இடங்களில் தற்போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அடை யாளம் காணப்பட்டு, அவற்றை விரைவில் அகற்ற ரயில்வே நிர் வாகம் நடவடிக்கை எடுத்து வரு கிறது.
தனுஷ்கோடி ரயில் மூலம் ராமேசுவரம் வரும் பக்தர்கள் தனுஷ்கோடி கடலில் புனித நீராட முடியும். மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் தனுஷ்கோடியில் அதிகரிக்கும்.