Published : 23 Aug 2019 10:42 AM
Last Updated : 23 Aug 2019 10:42 AM

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எடியூரப்பா எச்சரிக்கை

இரா.வினோத்

பெங்களூரு

கட்சி கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிருப்தி பாஜக எம்எல்ஏக் களுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத் துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த ஜூலை 26 -ம் தேதி எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச் சரவையில் இடம் பிடிக்க பாஜக மூத்த தலைவர்கள், காங்கிரஸ் - மஜதவில் இருந்து விலகிய அதிருப்தி எம்எல்ஏக்கள் போட்டி போட்டனர். இதனால் அமைச் சரவை விரிவாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி மூத்த தலைவர் கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, அசோகா உள்ளிட்ட 17 பேர் அமைச் சர்களாகப் பதவியேற்றனர்.

அமைச்சர் பதவி கிடைக்காத தால் மூத்த எம்எல்ஏக்கள் திப்பே ரெட்டி, அங்காரா, பாலசந்திர ஜார்கிஹோளி, ரேணுகாச்சார்யா உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்த னர். இதனால் அமைச்சரவை பதவியேற்பு விழாவை இவர்கள் புறக்கணித்தனர். மேலும் இவர் களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்ததால் எடியூரப்பா ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனிடையே கடந்த 2012-ல் சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த லட்சுமண் சவதி, சி.சி.பாட்டீல் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட தற்கு எதிர்க்கட்சிகளும் மகளிர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த லட்சுமண் சவதிக்கு அமைச்சர் பதவி வழங் கியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரேணுகாச்சாரியா தலைமையில் நேற்று ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த முறை எடியூரப்பா ஆட்சியை கவிழ்த்த பாலசந்திர ஜார்கிஹோளி, திப்பே ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் எம்.டி.பி.நாகராஜ், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோரும் அமைச்சரவையில் இடம் கிடைக்காதது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது.

முரளிதர ராவ் ஆலோசனை

இந்நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நேற்று எடியூரப்பாவை டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத் தில் சந்தித்து அவசர ஆலோ சனை நடத்தினார். அப்போது அதிருப்தியாளர்களை உடனே சரிசெய்யும் வகையில் வாரியத் தலைவர் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடியூரப்பா அதிருப்தியில் உள்ள பாலசந்திர ஜார்கிஹோளி, ரேணுகாச்சாரியா ஆகியோரை தனது வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் எடியூரப்பா கூறும் போது, “கட்சி மேலிடத்தின் உத்தரவின்பேரிலேயே 17 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட் டுள்ளது. இன்னும் சிலருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே அமைச்சரவையில் 16 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன.

கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்படுவோர் மீதும், கட்சித் தலைவர்களை ஊடகங் களில் விமர்சிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆக வுள்ள நிலையில், அனைவரும் பொறுமை காத்தால் மட்டுமே, மக்களுக்கு நல்லது செய்ய முடியும்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x