

சென்னை
சென்னை உயர் நீதிமன்ற வளாகத் தில் உள்ள கலங்கரை விளக்கங்கள் உள்ளிட்ட பாரம்பரியக் கட்டிடங் களை பார்வையிட பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்க திட்ட மிட்டுள்ளதாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தெரிவித்தார்.
சென்னையில் முதன்முதலாக புனித ஜார்ஜ் கோட்டையில் 1796-ம் ஆண்டு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் 1844 மற்றும் 1894-ம் ஆண்டுகளில் 2-வது, 3-வது கலங் கரை விளக்கங்கள் அமைக்கப் பட்டன.
2-வது கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு, 175 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, கலங்கரை விளக்கங்களின் தலைமை இயக்குநரகம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் வளாகத்தில் நேற்று நடந்தது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தின் படம் இடம்பெற்ற சிறப்பு அஞ்சல் உறையை சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யும், உயர் நீதிமன்ற வளாகத் தில் உள்ள பாரம்பரியக் கட்டிடங் கள் பராமரிப்பு குழு தலைவரு மான டி.எஸ்.சிவஞானம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் நீதிபதி சிவஞானம் பேசியதாவது:
சென்னை உயர் நீதிமன்றம் 1962-ம் ஆண்டில் 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, அதை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் 50 பைசா அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 2011-ல் நடந்த 150-வது ஆண்டு விழா வில் சிறப்பு அஞ்சல் உறை வெளி யிடப்பட்டது.
தற்போது, உயர் நீதிமன்ற வளாகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டதன் 175-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப் பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தை அஞ்சல் துறை தொடர்ந்து கவுரவப் படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக் கிறது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்கள் கலைநயம் மிக்கவை. அதன் அழகை ரசிக்க ஒருநாள் போதாது. பல்வேறு துறை வல்லுநர்களும் அவற்றை பழமை மாறாமல் புதுப்பித்து, தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரியக் கட்டிடங் களை அனைவரும் பார்வையிட வேண்டியது அவசியம். அந்த வளாகம் தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கண்காணிப் பில் உள்ளது. அந்த இடத்தை பார்வையிட பொதுமக்களை அனு மதிப்பதற்கு திட்டமிட்டு வரு கிறோம். முதல்கட்டமாக சனிக் கிழமைகளில் காலை நேரம் மட்டும் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்ட மிட்டுள்ளோம்.
இந்தியாவில் அனைத்து மாநி லங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் வளாகத்தில் 2 கலங்கரை விளக்கங்கள் கொண்ட ஒரே நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் இந்திய கலங்கரை விளக்கங்களின் தலைமை இயக்குநர் இ.மூர்த்தி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத், பி.டி.ஆஷா, வி.பவானி சுப்பராயன், வரலாற்று ஆய்வாளர் டி.ஹேமச்சந்திர ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.