Published : 22 Aug 2019 08:11 PM
Last Updated : 22 Aug 2019 08:11 PM

என்மீது  அளிக்கப்பட்டது பொய்ப்புகார் : விரைவில்  அனைத்து உண்மைகளையும் சொல்கிறேன்: பிக்பாஸ் மதுமிதா பேட்டி

சென்னை,

பணத்தை செட்டில் பண்ணுவதாக சொன்னவர்கள் திடீரென புகார் அளித்தது ஏன் என்று புரியவில்லை அது பொய்ப்புகார், விரைவில் அவர்கள் ஏற்பாடும் செய்யும் பிரஸ்மீட்டில் அனைத்து உண்மைகளையும் சொல்கிறேன் என பிக்பாஸ் மதுமிதா தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்பாளர் மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். திடீரென நிர்வாகத்தை மிரட்டுவதாக கிண்டி போலீஸில் மதுமிதா மீது பிக்பாஸ் நிர்வாகம் புகார் அளித்தது.

இதையடுத்து அவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியயதாவது:

“இந்த விவகாரத்தில் பிக்பாஸ் நிறுவனம் சார்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து தொடர்ச்சியாக ஊடக நண்பர்கள் அனைவரும் என்னை தொடர்புக்கொண்டு கேட்டபோது காவல் நிலையத்திலிருந்து அப்படி ஒரு தகவலே வரவில்லை என்று தெரிவித்திருந்தேன்.

பின்னர் இன்று காலை என்னுடைய வழக்கறிஞரை அனுப்பி விசாரிக்க சொன்னேன் அவர் விசாரித்தபோது புகார் அளிக்கப்பட்டது உண்மைதான் என்று தெரிவித்துள்ளனர்.

இது முற்றிலுமாக பொய் புகார், ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் புகார் வருவதற்கு முன்னர் விஜய் டிவி நிர்வாகம் உங்களுக்கான பேமெண்ட் அனைத்து விஷயங்களையும் நாங்கள் விரைவாக செட்டில் செய்து விடுகிறோம், நீங்கள் உங்களுக்கான இன்வாய்ஸ் கொடுத்து விடுங்கள் என்று சொன்னதை அடுத்து நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்தோம்.

அதன் பின்னர் விரைவில் உங்கள் அமௌண்ட் வந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால் அதன்பின்னர் விஜய் டிவி. எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்றே தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகாலமாக நான் சினிமாவில் இருக்கிறேன். சின்னத்திரை, வெள்ளித்திரையில் உறுப்பினராக உள்ளேன்.

எந்த காலத்திலும் நான் யார் மீதும் புகார் அளித்ததில்லை, என் மீதும் யாரும் புகார் அளித்ததில்லை. இது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த புகாருக்குப்பின் நான், எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த பொய்ப்புகார் மூலமாக நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்துகிறேன்”.

இவ்வாறு தெரிவித்த மதுமிதா தொடர்ந்து செய்தியாளர் கேள்விகளுக்கு அளித்த பதில்

எதற்காக இந்தப்புகார் என்று உங்களுக்கு தெரியவில்லையா?

எனக்கு தெரியவில்லை, இதை விஜய் டிவி நிர்வாகமும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்சாரும் தலையிட்டு இந்த விவகாரத்தில் சுமூகமாக ஒரு முடிவை கொண்டுவரணும் என்பதுதான் எனது விருப்பம்.

உங்களுக்கான தொகையை கொடுக்கவில்லை என்பதால் நீங்கள் கேட்டு அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் புகாரா?

அதற்காகத்தான் பதில் சொன்னேன், அவர்கள் இன்வாய்ஸ் கேட்டு நானும் கொடுத்து பணம் தருகிறேன் என தேதியும் அவர்கள் சொல்லி விட்டப்பின், ஏன் இப்படி புகார் கொடுத்துள்ளார்கள் என்று எனக்கு புரியவில்லை.

எதனால் இந்தப்புகார் கொடுத்திருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா?

என்ன காரணம் என்று தெரியவில்லை இதை விஜய் டிவி நிர்வாகமும், கமல் சாரும் பேசித்தான் சுமூகமாக முடிக்கணும்.

அவர்கள் புகாரில் உள்ளபடி நீங்கள் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் ஏதாவது அனுப்பினீர்களா?

நிறைய மெசேஜ், வழக்கமாக வாட்ஸ் அப்பில் அனுப்புவார்கள் நான் பதில் அனுப்புவேன், அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. என்னை வெளியில் வந்தவுடன் ஆதரவாக இருந்தது மீடியாவும் பொதுமக்களும்தான், அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

டிஆர்பி ரேட்டுக்காக இப்படி புகார் கொடுக்கப்பட்டுள்ளதா?

எனக்கு தெரியவில்லை, இன்னமும் நான் அதிர்ச்சியில்தான் இருக்கிறேன்.

இந்த கம்ப்ளைண்டுக்கு ஏதாவது எதிர்ப்புகார் கொடுத்துள்ளீர்களா?

எதிர்கம்ப்ளைண்ட் கொடுக்கவில்லை, ஸ்டேட்மெண்டாக கொடுத்துள்ளேன்.

கையை அறுத்துக்கொள்ளும் அளவில் அப்படி என்ன நடந்தது? என்ன வகையான அக்ரிமெண்ட் போட்டுள்ளார்கள்?

அதை எதையும் நான் சொல்ல முடியாது, அவர்கள் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு பிரஸ்மீட் கொடுப்பதாக கூறியுள்ளார்கள் அன்று உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்.

கையை அறுத்துக்கொள்ளும் வருவதற்கு முடிவுக்கு மன அழுத்தம்தான் காரணமா?

இதுகுறித்து இப்போது நான் எதுவும் சொல்லக்கூடாது. அவர்கள் ஒரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்கள், அதில் உங்கள் அனைத்துக்கேள்விகளுக்கும் நான் கட்டாயம் பதில் அளிக்கிறேன். அந்த பிரஸ்மீட்டை சீக்கிரமாக வைக்கச்சொல்லி நானே வலியுறுத்தியுள்ளேன்.

நீங்கள் நிகழ்ச்சியில் இருந்தீர்கள் திடீரென பார்த்தால் வெளியில் வந்துவிட்டீர்கள் இடையில் என்ன நடந்தது என்பதை ஏன் காட்டவில்லை?

அதை அப்படியே திருப்பி விஜய் டிவியிடம் கேட்டு, காட்டச்சொல்லுங்கள். அனைத்து உண்மைகளும் தெரியும். என்னிடம் கேட்பதைவிட அவர்களிடம் கேட்டால் உங்களுக்கான கேள்விக்கு பதில் வரும்.

நீங்கள் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் ஒன்று இருக்கும், அதை ஒளிபரப்பவில்லை? அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கா?

கட்டாயம் இருக்கும் அல்லவா? இல்லாமல் இருக்குமா? அந்த விஷயத்தை இப்போது சொல்ல விரும்பவில்லை. அதற்கான பிரஸ் மீட்டில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்.

இவ்வாறு மதுமிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x