Published : 22 Aug 2019 08:52 AM
Last Updated : 22 Aug 2019 08:52 AM

கோடியக்கரை கோயிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு: இளைஞர்கள் 3 பேர் கைது 

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கோடியக்கரை மாரியம்மன் கோயிலில் இருந்து சிலைகளை திருடிய 6 பேரில் 3 பேரை போலீஸார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 2 ஐம்பொன் சிலைகளை மீட்டுள்ளனர்.

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் கருவறையில் இருந்த மாரியம்மன், முருகன்,
வள்ளி, தெய்வானை ஆகிய 4 ஐம்பொன் சிலைகளை கடந்த ஆக. 16-ல் சிலர் திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக, வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், கோடியக்கரை செல்போன் டவரில் பதிவாகி இருந்த செல்போன் உரை
யாடல்களின் அடிப்படையில், சிலைகளைக் கடத்தியது 6 பேர்கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வேதாரண்
யம் மறைஞாயநல்லூர் பன்னாங்காட்டைச் சேர்ந்த லோகேஸ்வரன்(19), உதயராஜன்(30), சின்னதும்பூர் சதாசிவம்(30) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், திருக்குவளையில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 அடி உயர வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், சிலைகளை திருட பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். சிலை கடத்தலுக்கு உதவிய மேலும் 3 குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x