சந்திரயான்-2 சுற்றுப்பாதை அடுத்த நிலைக்கு மாற்றம்: நிலவை வெற்றிகரமாக வலம் வருகிறது
சென்னை
நிலவை வலம் வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றி அமைக் கப்பட்டது. நிலவில் தரையிறங்கி ஆராய் வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உரு வாக்கிய சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி ஏவப்பட்டது. அதன்பின் சந்திரயான் சுற்றுப் பாதை படிப்படியாக 5 முறை மாற் றப்பட்டு பூமிக்கும், விண்கலத் துக்குமான தொலைவு அதிகரிக்கப் பட்டது. தொடர்ந்து கடந்த 14-ம் தேதி புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும்படி சந்திரயா னின் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது.
இதையடுத்து, 6 நாட்கள் பயணத் துக்குபின் 20-ம் தேதி நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்கு அருகே சந்திரயான் சென்றது. அப்போது விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திர யான் உந்தித் தள்ளப்பட்டது. அதன் பின் நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சுற்றிவரத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சந்திரயானின் வேகத்தை படிப்படி யாக குறைத்து அதன் சுற்றுப் பாதையை மாற்றும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதன்படி முதல் கட்டமாக நேற்று மதியம் 12.30 மணிக்கு திரவ வாயு இயந் திரம் சுமார் 21 நிமிடங்கள் இயக்கப் பட்டு விண்கலத்தின் சுற்றுப் பாதை வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டது.
தற்போது குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 4,412 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுவட்டப்பாதையில் நிலவை வலம் வருகிறது சந்திரயான். இதேபோல் விண்கலத்தின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு அதன் சுற்றுப்பாதை மாற்றப் படும். இதன்மூலம் நிலவின் தரைப் பகுதிக்கும், விண்கலத்துக்குமான உயரமும் தொடர்ந்து குறையும்.
அடுத்தகட்டமாக சந்திரயான் சுற்றுப்பாதை ஆகஸ்ட் 28-ம் தேதி மாற்றி அமைக்கப்படும். இறுதியாக திட்டமிட்டபடி செப்டம் பர் 7-ம் தேதி விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் மெதுவாக தரையிறக்கப்படும்.
இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.
