

கோவிந்தராஜ்
ஆசனூர் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.50 கோடி ரூபாய் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம், தமிழக & கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆசனூர் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் எஸ்.எஸ்.ஐ வெற்றிவேல் தலைமையில் போலீசார் நேற்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வாகனங்களை தணிக்கை செய்து வந்தனர்.
அப்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து மைசூர் வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த மஹாராஷ்டிரா பதிவுஎண் கொண்ட காரை நிறுத்தி மதுவிலங்கு போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அதில் மகாராஷ்டிரா மாநிலம் ஹவாலி மாவட்டத்தைச் சேர்ந்த கார் உரிமையாளர் ரோகன்குமார் (39), புனே நிக்டி பகுதியை சேர்ந்த கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பைஜூ வர்கீஸ்(50) ஆகியோரை சோதனையிட்டபோது காரில் கட்டுக்கட்டாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ. 1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த மதுவிலங்கு போலீசார் இருவரையும் பிடித்து ஆசனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆசனூர் போலீசார் விசாரணையில் பைஜூ வர்கீஸ் என்பவர் புனேவில் வேலை செய்து வருவதாகவும் கேரளா மாநிலம் மலப்புழாவில் நிலம் வாங்குவதற்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டதாவும் உரிய ஆவணங்களை புனேவில் இருந்து கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசனூர் போலீசார் பறிமுதல் செய்த பணம் ரூ. 1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்தை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால் ஆசனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.