

விருத்தாசலம்
தமிழகத்தில் ஆவின்பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு பால் விலையை ரூ.6 அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
ஆவின்பால் விலை உயர்வைக் காரணம் காட்டி, தேநீர் கடைகளில் ரூ.2 அதிகரித்து ஒரு கோப்பை தேநீர் விலை ரூ.12- ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சில பகுதிகளில் ரூ.8, மற்ற சில பகுதிகளில் ரூ.10-க்கும் விற்பனை செய்து வந்த தேநீரும் முறையே ரூ. 2 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேநீர் கடைகளில் ஒரு தேநீர் ரூ.12-க்கும், காபி ரூ.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள தேநீர் கடைகளில் விலை உயர்வுக் குறித்து, தேநீர் அருந்துபவர் களிடம் கேட்ட போது, அரசு ஆவின் பால் விலையை தான் உயர்த்தி யுள்ளது. ஆனால் பெரும் பாலான தேநீர் கடைக ளில் தனியார் பால் களை தான் பயன் படுத்துகின்றனர். ஆவின் பாலில் தேநீர் விற்பனை எண்ணிக்கை மிகச் சொற்பமே. ஆனால் அனை வரும் திடீரென விலையை உயர்த்தி யிருப்பது தவறு என்று தெரிவித் தனர்.
கள்ளக்குறிச்சி நகர குடியி ருப்போர் நலச் சங்கத் தலைவர் கணேசமூர்த்தி கூறுகையில், தனியார் பால் பாக்கெட் விலை கூடவில்லை. ஆனாலும் கள்ளக்குறிச்சி மருத்து வமனைப் பகுதிகளில் இயங்கி வரும் தேநீர் கடைகள் விலையை உயர்த்தியிருக்கிறது, நோயாளிகளையும், அவரைச் சார்ந்த வர்களையும் நம்பி இக்கடைகள் இயங்கி வருகின்றன. அரசு மருத்துவமனைப் பகுதிகளில் பல ஏழைகள் தேநீர் பரு கியே பசியை ஆற்றிக் கொண்டிருக்கும் நிலை யில்,விலை உயர்த்தி யிருப்பது கண்டனத் துக்குரியது என்றார்.