Published : 21 Aug 2019 09:40 AM
Last Updated : 21 Aug 2019 09:40 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்: குடும்பத்தினருடன் பங்கேற்பு

சென்னை

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு டாக் டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தமி ழக அரசுக்கு அழுத்தம் கொடுப் பதற்காக அரசு டாக்டர்கள் ஒன்றாக இணைந்து தமிழ்நாடு அரசு டாக்டர் கள் கூட்டமைப்பை தொடங்கினர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கடந்த மாதம் 29-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் ஒத்துழை யாமை இயக்கத்திலும் முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால், அரசு மருத்துவ மனைகளில் நிர்வாக பணிகள் முடங்கியுள்ளன. காப்பீட்டுத் திட்டம் செயல்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீடு அட்டை மூலம் சிகிச்சை பெறுவதில் நோயா ளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக தமிழகம் முழு வதும் தங்களது குடும்பத்தின ருடன் மனித சங்கிலி போராட்டத்தில் டாக்டர்கள் நேற்று ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு பொதுமருத்துவமனை வெளியே நேற்று பகல் 1 மணி முதல் 2 மணி வரை 700-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் குடும்பத் தினருடன் மனித சங்கிலியில் பங் கேற்றனர். சாலை ஓரத்தில் டாக்டர் கள் மனித சங்கிலி அமைத்து நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது: இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் அரசு டாக்டர்கள் மிகவும் குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு டாக்டர் களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங் கிட வேண்டும். எம்சிஐ விதிப்படி டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் குறைக்கக் கூடாது.

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள அரசு மருத்துவர் களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு மருத்துவர் களுக்கு முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். இக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அடுத்தக்கட்ட மாக வரும் 23-ம் தேதி சென்னை யில் அரசு டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 27-ம் தேதி தமிழ கம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x