Published : 21 Aug 2019 08:18 AM
Last Updated : 21 Aug 2019 08:18 AM

சாதாரண பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவிப்பு: சிறப்பாசிரியர்களை நியமிக்க கோரிக்கை

மு.யுவராஜ்

சென்னை 

சாதாரணப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை யான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக 10 அரசு சிறப்பு பள்ளிகள் பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கிடையே, சாதாரண பள்ளிகளிலும் பார்வை குறைபாடு மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவி கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இங்குள்ள ஆசிரியர்களுக்கு பிரெய்லி குறித்து தெரிவதில்லை.

இதனால், அத்தகைய மாணவ, மாணவிகள் கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சாதாரண பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பிரெய்லி எழுத்து கற்பிக்கும் வகையில் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர் களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பூவிருந்த வல்லியில் உள்ள பார்வையற்றோ ருக்கான அரசு பள்ளியின் ஆசிரியர் யு.சித்ரா கூறியதாவது:

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பிரெய்லி முறையில் படித்தால்தான் எழுத்து களின் வடிவத்தை அறிய முடியும். ஆனால், சாதாரண பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரி யர்கள் தங்களுக்கு பிரெய்லி தெரியாததால் வாய்மொழியாக சொல்லி கொடுப்பது மற்றும் குரலை பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் மனப்பாடம் செய்ய வைக்கின்றனர்.

பள்ளி, கல்லூரி வரை இம் முறையில் கற்பதில் மாணவ, மாணவிகளுக்கு சிக்கல் இருக்காது. அதன் பிறகு, எழுத்தின் வடிவம் தெரியாததால் சிந்தனையில் தாக் கம் ஏற்பட்டு ஆளுமைத் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால், பணி யிடங்கள், தொழில்நுட்பங்களைக் கையாளுதல் என அனைத்திலும் பின்தங்கும் சூழல் ஏற்படுகிறது.

ஒரு வட்டாரத்தில் 8 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் என நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களும் பார்வையற்றோர் மற் றும் பார்வை குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர், உடல் இயக் கம் குறைபாடு மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளில் எதாவது ஒரு பிரிவில்தான் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

எனவே, ஒரு வட்டாரத்தில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படிக்கின்ற னர் என்பதை அறிந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பாசிரி யர்களை நியமிக்க வேண்டும்.

வீட்டுக்கு அருகில் இருப்ப தால்தான் சாதாரண பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாண விகள் அதிக அளவில் சேர்க்கப் படுகின்றனர். எனவே, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகை பிரித்து பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும்என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x