திருவல்லிக்கேணியில் 3-வது திருமணத்துக்கு முயன்றவர் கைது

திருவல்லிக்கேணியில் 3-வது திருமணத்துக்கு முயன்றவர் கைது
Updated on
1 min read

இரண்டாவது திருமணம் செய் தது தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் ஆஜராகிவரும் நபர் 3-வது திருமணம் செய்ய வந்தபோது பிடிபட்டார். மாலையும் கழுத்துமாக மணமகன் உடையில் இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட் டையை சேர்ந்தவர் சலீம் அகமது (35). இவரது மனைவி குல்னாத். இவர்களுக்கு கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சலீம் கடந்த ஆண்டு செப்டம் பர் மாதம் மண்ணடியை சேர்ந்த ஒரு பெண்ணை 2 வதாக திரு மணம் செய்துள்ளார். முதல் மனை வியை பிரிந்து அவருடன் குடும் பம் நடத்திவந்தார். இதுகுறித்து தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் குல்னாத் புகார் கொடுத்தார். சலீம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய் தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் குல்னாத், சலீம் ஆஜராகி வருகின்றனர்.

இந்நிலையில், 3 வது திருமணம் செய்ய முயற்சித்துள் ளார் சலீம். திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள மண்டபத்தில் நேற்று காலை 10 மணி அளவில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண் டிருந்தன. மண்டபத்தில் உறவி னர்கள் நிறைந்திருந்தனர்.

இதுபற்றி தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் குல்னாத் மீண்டும் புகார் கொடுத் தார். காவல் ஆய்வாளர் நசீமா சாதாரண உடையில் சென்று திருமண மண்டபம் அருகில் கண்காணிக்கத் தொடங்கினார். காலை 11.30 மணி அளவில் மணமகன் உடையில் இருந்த சலீமை உறவினர்கள் அழைத்து வந்தனர். அவரை ஆய்வாளர் நசீமா வழிமறித்து விசாரணை நடத்தினார். அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in