

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செய லாளர் க.மீனாட்சிசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் மெட்ரிகு லேஷன் பள்ளிகள் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைவதற்கு காரணமே இத்தகைய அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள்தான்.
தனியார் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 10-ம் வகுப்பு, பிளஸ் டூ பாடங்களை முன்கூட்டியே திரும்பத் திரும்ப நடத்தி தயார் செய்வதால்தான் பொதுத் தேர்வுகளில் அப்பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி விகி தத்தைப் பெறுகிறார்கள். கல்வி யறிவு மிக்கவர்களின் பிள்ளை களை மட்டும் சேர்ப்பதும், படிக்காத பாமரர்களின் பிள்ளை களைச் சேர்க்க மறுப்பதும்தான் தனியார் பள்ளிகள் தேர்ச்சியில் முன்னிலையில் இருப்பதற்குக் காரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.