மதுரை மாவட்டம் இரண்டாக பிரிக்க வாய்ப்பே இல்லை: வருவாய்த்துறை அதிகாரி திட்டவட்டம்

மதுரை மாவட்டம் இரண்டாக பிரிக்க வாய்ப்பே இல்லை: வருவாய்த்துறை அதிகாரி திட்டவட்டம்
Updated on
2 min read

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை

மதுரை மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து கோரிக்கைகள் ஏதும் இல்லாத நிலையில், இதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின உரையின்போது, வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப் படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். மயிலாடுதுறை உள்ளிட்ட வேறு சில நகரங்களின் பெயரில் மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளி யிட்டனர்.

இந்நிலையில், மதுரை மாவட் டத்தையும் 2-ஆக பிரிக்க வாய்ப் புள்ளதாகவும், திருமங்கல த்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகலாம் எனவும் தகவல் பரவியது.

இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை. அப்படியே பிரிக்கும் நிலை ஏற்பட்டாலும் திருப்பரங்குன்றம்தான் தலைமையிடமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். எனினும் மாவட்டம் பிரிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வளைதளங்களில் தொடர்ந்து பரவியபடி உள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தைப் பிரிக்கும்படி எந்தக் கோரிக்கையும் வரவில்லை. இதனால் பிரிப்பது குறித்த எந்தப் பணியும், ஆய்வும் நடக்கவில்லை. அலங்காநல்லூரை தலை மையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கும் பணி மட்டுமே நடக்கிறது.

மதுரை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மதுரைக்கு தற்போது 1 மணி நேரத்தில் வந்துவிடலாம். பேரையூர் உள்ளிட்ட சில பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம். மேலும், மதுரையில் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய மாவ ட்டம் பிரிக்கப்பட்டால் அதில் 5 தொகுதிகள் இடம்பெற வேண்டும். அப்படி பிரிக்கும் வகையில் மதுரை மாவட்டத்தின் பூகோள அமைப்பு இல்லை.

திருமங்கலம், உசிலம்பட்டி, திருப் பரங்குன்றம் தொகுதிகள் ஒரு பக்கம் இருப்பதாக எடுத் துக் கொள்ளலாம்.

எனினும், உசில ம்பட்டியை பிரிக்க அப்பகுதி மக்கள் விரும்புவது சந்தேகமே. திருப்பரங்குன்றம் தொகு தியில் பாதி மதுரை மாநகராட்சிக்குள் இடம் பெற்றுள்ளது. மதுரையை ஒட்டியுள்ள சோழவந்தான் தொகுதி யைப் புதிய மாவட்டத்தில் சேர்க்க வாய்ப்பு இல்லை. இதை அப்பகுதி மக்கள் ஏற்கவும் மாட்டார்கள். மதுரை நகருக்குள்ளேயே முழுமையாக 4 தொகுதிகள், கிழக்கு தொகுதியின் பெரும்பகுதி, திருப்பரங்குன்றம் தொகுதியின் ஒருபகுதி அடங்கி யுள்ளது.

மதுரை நகரை வைகை ஆற்றை மையப்படுத்தி 2 ஆக பிரித்து தெற்கு, வடக்கு மாவட்டமாக வேண்டுமானால் உருவாக்கலாம். அப்போது, மதுரை மாநகரில் 2 தொகுதிகள், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்த்து 5 சட்டப்பேரவை தொகுதி களைக் கொண்டு புதிய மாவட்டம் உரு வாக்கலாம். இதற்கான அவசியமும் எழவில்லை.

மாவட்டம் பிரிப்பு தொடர்பாக கோரிக்கை இருக்க வேண்டும். இதற்கான காரணமும் வலுவாக இருக்க வேண்டும். மக்கள் விருப்பம், வரவேற்பு இருந்தால் மட்டுமே அப்பணி நடக்கும். இது போன்ற எந்தச் சூழலும் இல்லாத நிலையில், மதுரை மாவட்டத்தைப் பிரிக்கும் வாய்ப்பு தற்போது இல்லை. அரசியல் ரீதியான அழுத்தமும் இல்லை, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in