

கோவையில் உள்ள கேம்போர்டு சர்வதேச பள்ளி மைதானத்தில் தங்க காலணி கால்பந்து (கேம்போர்டு கோல்டன் பூட்) சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 25 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 18 வயதுக்கு உட்டோர் பிரிவில், ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். சீனியர் செகண்டரி பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளியும், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் டெல்லி பப்ளிக் பள்ளி, டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளி ஆகியவையும் முதலிரண்டு இடங்களை வென்றன.
இதேபோல, 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆட்ட நாயகனாக ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் ஹாகிப், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளி மாணவர் சிதேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த கோல்கீப்பராக 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஸ்ரீராகவேந்திர பள்ளி மாணவர் அபே, 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேம்போர்டு பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், முதல்வர் பூனம்சியல் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.