Published : 20 Aug 2019 08:52 AM
Last Updated : 20 Aug 2019 08:52 AM

செப்.2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா; கூடுதல் எண்ணிக்கையில் சிலைகள் வைக்க அனுமதியில்லை: காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் தகவல் 

டி.ஜி.ரகுபதி

கோவை

கோவையில் கடந்தாண்டை விட, நடப்பாண்டு கூடுதல் எண்ணிக்கை யில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை என காவல் ஆணையர், காவல் கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சமயத்தில், பொதுமக்கள், இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் சிலைகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப் பட்டு, நீர்நிலைகளில் கரைக் கப்படும். கோவையில் கடந் தாண்டு ஏறத்தாழ 1,340-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நடப்பாண்டு, வரும் செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியும் தீவிரமடைந் துள்ளது. இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறையிடம் விண்ணப்பித் துள்ளனர். மேலும், விநாயகர் சிலை கள் வைப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் இந்து அமைப்பினரிடம், காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

சுண்டக்காமுத்தூர் சாலையில் உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக் கும் தனியார் நிறுவன உரிமையாளர் சரவணக்குமார் கூறும் போது, ‘‘மங்கள விநாயகர், தாமரை விநாய கர், பசு விநாயகர், எலி விநாயகர், ராஜ கம்பீர விநாயகர், நாக விநாய கர், ஜல்லிக்கட்டு விநாயகர், ஏர் உழவன் விநாயகர், குபேர விநாயகர், வீர சிவாஜிவிநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 3 அங்குலம் முதல் 2 அடி உயரம் வரை களிமண்ணாலும், 2 அடி முதல் 12 அடி வரை உயரம் உள்ள சிலைகள் கிழங்கு மாவு, ஓடக்கல் பவுடர், காகிதப் பொடி ஆகியவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கப்படுகின்றன. சிலைக ளுக்கு டிஸ்டெம்பர் பூசப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், நீர் நிலை களுக்கும் மாசு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறும்போது,‘‘ விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தின் மேற்கூரை, சுற்றுப்புறப் பகுதி எளிதில் தீப்பிடிக்காத வகையில் பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும். அங்கு மின்சார ஒயர்களை, அதற்குரிய குழாயில் அமைத்து பாதுகாப்பாக பொருத்தி யிருக்க வேண்டும். தீத் தடுப்பு சாதனங்கள் சிலைகளின் அருகே வைத்து இருக்க வேண்டும். தீபம், கற்பூரம் ஏற்றி வைத்து இருக்கும் போது உரிய கண்காணிப்பு செலுத்த வேண்டும்’’ என்றார்.

காவல்துறையினர் கூறும் போது, ‘‘சிலை வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வோர் இடத்திலும் காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பர். சிலையை வைத்த இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் 24 மணி நேரமும் உடன் இருக்க வேண்டும். ஊர்வலத் தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கோஷங் களை எழுப்பக்கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்கள் இந்து அமைப்பினருக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது’’ என்றனர்.

சிலைகளுக்கு அனுமதியில்லை

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும் போது, ‘‘மாநகரில் கடந் தாண்டு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே நடப்பாண் டும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். கூடுதல் சிலைகள் வைக்க அனுமதிக்கப் படாது.

கடந்தாண்டு எந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததோ, எந்த வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதோ அதே முறை தான் நடப்பாண்டும் பின்பற்றப்படும். விநாயகர் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக நேற்று காவல் அதிகாரிகளுக்கு, சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஆலோசனை வழங்கினார். இன்று காவல் அதிகாரிகள், இந்து அமைப்பினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது’’ என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜித்குமார் கூறும் போது,‘‘ மாவட்டப் பகுதியிலும், நடப்பாண்டு கூடுதல் எண்ணிக்கையிலான விநாயகர் சிலைகளுக்கு அனுமதி கிடையாது. கடந்தாண்டு எண்ணிக்கையே பின்பற்றப்படும். விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x