

ஸ்ரீவில்லிபுத்தூர்
எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசுவது எங்கள் நோக்கமல்ல என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் சம்பந் தமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கடந்த மாதம் 27-ம் தேதி பத்திரிகை மற்றும் தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்.அவர் தெரிவித்த கருத்து குறித்து இந் திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் முதல் வர் தனிப் பிரிவுக்கு புகார் தரப் பட்டது. இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் வரும் 22-க்குள் நேரில் ஆஜராகும் படி ஜீயருக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
காவல் துறை சம்மன் அனுப்பியதற்கு ஜீயர் விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “1600-ம் ஆண்டு காலகட்டத்தில் முகலாயர் படை எடுப்பில் அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட் டார் எனவும், அது இப்போது தேவையில்லை என்றும், அத்தி வரதரை மீண்டும் மக்கள் தரிசனத் துக்கு வெளியே வைக்க வேண்டும் எனவும் கூறினேன்.
ஆனால் தொலைக்காட்சியில் எனது முழுக் கருத்தையும் பதிவு செய்யாமல் குறிப்பிட்ட கருத்தை மட்டும் எடுத்து காட்சிப்படுத்தியுள் ளனர். எனது கருத்தானது திருவரங்கன் உலா, மதுரா விஜயம் ஆகிய புத்தகங்களிலும் எழுதப்பட்டுள் ளது. மேலும் துண்டுப் பிரசுரமாக வும் வந்துள்ளது.
எந்த இடத்திலும் எந்த மதத்தை யும் இழிவுபடுத்துவது, பேசுவது எங்கள் நோக்கம் அல்ல என்ப தையும் இதன் மூலம் தெரியப் படுத்திக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.