

சென்னை
அத்திவரதர் சிலை வைக்கப் பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள சயன அறையை பொற் றாமரைக் குளத்தில் உள்ள தண் ணீரால் நிரப்ப வேண்டாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்திவரதர் சிலை வைக்கப் பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யக் கோரி அசோகன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு மாசுகட் டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான அரசு சிறப்பு ப்ளீடர் சி. காசிராஜன் கூறும்போது, “அனந்த சரஸ் குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் கோயிலில் உள்ள ஆழ்துளை கிணற்று நீர் ஆகியவற்றை சேகரித்து ஆய்வு செய்ததில், நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மை என அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் குடி நீருக்கு இணையாக உள்ளன. ஆனால் பொற்றாமரைக் குளத்தில் உள்ள தண்ணீர் மட்டும் இளம் பச்சை நிறத்தில் மாறியுள்ளது” என தெரிவித்து இருந்தார்.
அப்போது அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.மகாராஜா ஆஜ ராகி, ‘‘அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அன் றைய தினமே நல்ல மழை பெய்து குளத்துக்கு போதுமான தண்ணீர் வந்து விட்டது. தேவைப் பட்டால் ஆழ்துளைக் கிணற்று நீரைக்கொண்டு அந்த குளத்தில் உள்ள சயன அறை நிரப்பப்படும்” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் உள்ள சயன அறையை, பொற்றாமரைக் குளத் தில் உள்ள தண்ணீரைக் கொண்டு நிரப்ப வேண்டாம்” என அறிவுறுத்தினார்.
மேலும், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அற நிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் ஆக.22-க்கு தள்ளி வைத்தார்.