

திருக்குறள் மாநாட்டில் திருமாவுடன் முரண்பட்டு வைகோ பாதியிலேயே வெளியேறிவிட்டதாகச் சொல்லப்படுவது குறித்து வைகோ எம்பி-யிடம் கேட்டோம்.
``திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று பிரதமர் மோடியைச் சந்தித்து திருக்குறள் நூலைக் கொடுத்து நான் வலியுறுத்தியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை அட்டாக் பண்ணிப் பேசினார் மாநாட்டுத் தலைவரான பொழிலன். சுயமரியாதை எங்களுக்கும் இருக்கிறது. எங்களது தமிழ் உணர்வும், திருக்குறள் உணர்வும் யாருக்கும் குறைந்தது இல்லை. நான் பிரதமரிடம் புத்தகம் கொடுத்ததை விமர்சனம் செய்து பேசுவது என்ன நியாயம் என்று கேட்டேன். அதுதான் நடந்தது.
வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியது இருந்ததால் முன்கூட்டியே பேசிவிட்டுக் கிளம்பினேனே தவிர, கோபித்துக்கொண்டெல்லாம் வெளியேறவில்லை. திருமாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்படியாவது எங்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதையே தொழிலாக வைத்திருப்பவர்கள் இப்படியான கருத்தை வெளியே பரப்புகிறார்கள். மறுநாள் மதிமுக சார்பில் நடத்திய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் கூட்டத்தில்கூட திருமா பங்கேற்றாரே?" என்றார் வைகோ.
இது தொடர்பான திருமாவளவனின் பேட்டியை முழுமையாகப் படிக்க: https://www.hindutamil.in/mag/kamadenu-25-08-19/ask/511700-thirumavalavan-interview.html