

சென்னை,
இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்வாகியுள்ள திருமாவளவனுடன் ஒரு பேட்டி...
என்றாவது ஒருநாள் தமிழ்நாடு தனிநாடாகிவிடாதா என்ற எண்ணம் இருப்பதால்தான் காஷ்மீரின் சிறப்புரிமை பறிக்கப்பட்டபோது, வலியும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டது என்று சொல்லலாமா?
காஷ்மீர் என்பது தமிழ்நாடு மாதிரியான ஒரு மாநிலமோ, உத்தரபிரதேசம் போன்று இந்தியாவோடு முற்றாக இணைக்கப்பட்ட மாநிலமோ கிடையாது. பெயருக்குத்தான் அது இந்தியாவின் மாநிலம். உண்மையில் தங்களுக்கெனத் தனி அரசியலமைப்புச் சட்டம் கொண்ட ஒரு தேசம் அது. தனி நாடாக இயங்க விரும்பிய காஷ்மீரை, எப்படியாவது தன்னகப்படுத்திவிட வேண்டும், ஆக்கிரமித்துவிட வேண்டும் என்ற வெறி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இருந்தது. அதில் பாகிஸ்தான் முந்திக்கொண்டு படையெடுக்க, காஷ்மீர் அரசர் ஹரிசிங் தடுமாற்றமடைய, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தனர் நேருவும், படேலும்.
அப்படி நிபந்தனைகளோடு இணைந்த மாநிலத்தை, இங்கே இயல்பாக இணைந்த மற்ற மாநிலங்களைப் போல நடத்துவதே எதேச்சதிகாரப்போக்குதான். அவர்கள் கையில் ராணுவம் இல்லை, நம்முடன் சண்டைபோட முடியாது என்ற ஆணவத்தில் எடுக்கப்
பட்ட நடவடிக்கை இது. கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சி அடிப்படையில்தான் இதை எதிர்க்கிறோமே தவிர, தமிழ்நாட்டைத் தனிநாடாக்க வேண்டும் என்ற உணர்வில் இதை நாங்கள் பேசவில்லை.
அந்தப் பகுதிக்கெனத் தனியாக சட்ட, திட்டங்கள் இருக்கலாம், அதில் இந்தியாவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்பதை ஒப்புக்கொண்டுதான் அது இந்தியாவோடு இணைக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்வதற்காகவே 370-ம், 35ஏ-யும் உருவாக்கப்பட்டதே தவிர, அவர்களுக்காக அல்ல. "நீ சாப்பிடுவது போல நான் சாப்பிட மாட்டேன், நீ உடுத்துவது போல நான் உடுத்த மாட்டேன். ஆனாலும் நீயும் நானும் நண்பர்கள். நாம் ஒன்றாகப் பயணிக்கலாம்" என்று நம்பி வந்தோரை நடுவழியில் கழுத்தறுத்துவிட்டது நமது அரசு. இது வரலாற்றுத் தவறு மட்டுமல்ல; ஹிஸ்டாரிக்கல் க்ரைம்.
பேட்டியை முழுமையாகப் படிக்க: https://www.hindutamil.in/mag/kamadenu-25-08-19/ask/511700-thirumavalavan-interview.html