Published : 19 Aug 2019 11:08 AM
Last Updated : 19 Aug 2019 11:08 AM

நான் நலமாக இருக்கிறேன்; கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை: வைகோ

சென்னை

தான் நலமாக இருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வைகோ மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று (ஆக.19) அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் வரும் 20-ம் தேதி அவர் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக, மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையடுத்து, வைகோ ஓய்வு எடுக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று (ஆக.19) சென்னை திரும்பிய வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "மருத்துவர் எனக்கு ஓய்வு அவசியம், நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு கூறியிருக்கிறார். மதிமுக தோழர்களும், என் மீது அன்பு கொண்டவர்களும் கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை. நான் நலமாக இருக்கிறேன்”, எனத் தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ: கோப்புப்படம்

இதையடுத்து, மத்திய அரசு மொழி வேறுபாடு காட்டவில்லை என, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, "இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்ற வெறியுடன் மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அமைச்சருக்கு சில அடிப்படை விஷயங்கள் புரிவதில்லை. அடிப்படை உண்மையே தெரியாமல் பேசுகிறார். அவர் எனக்கு நல்ல நண்பர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x