Published : 19 Aug 2019 08:48 AM
Last Updated : 19 Aug 2019 08:48 AM

ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிக்னல் கோளாறுகள் எதிரொலி; ஐரோப்பிய தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது ரயில்வே துறை

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிக்னல் கோளாறுகள் ஏற்படுவதால் ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, சீரான ரயில் சேவையை வழங்க ஐரோப்பிய நாட்டின் புதிய சிக்னல் தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தவுள்ளது.

நம் நாட்டில் இயக்கப்படும் ரயில்களில் 10-ல் 4 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் தண்டவாளப் பராமரிப்பு பணி இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், அடுத்த முக்கிய பிரச்சினையாக சிக்னல் தொழில் நுட்ப கோளாறுகள் உள்ளன.

நாடுமுழுவதும் ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிக்னல் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படு கின்றன. குறிப்பாக, மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா போன்ற இடங்களில் அதிகளவில் சிக்னல் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன.

இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவைகளில் ஒரு மணிநேரம் முதல் 4 மணி நேரம் வரையில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ஐரோப்பிய நாட்டின் சிக்னல் சிஸ்டம் நிலை - 2 தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வேயில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில்வேத் துறையில் உள்ள சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவில் காலாவதியான சிக்னல் களை புதுப்பிக்க, சிக்னல் நிறுவு வது, நிலையங்களின் சிக்னல்களை தரம் உயர்த்துவது உள்ளிட்ட பணி களை மேற்கொள்ள இந்த நிதி ஆண்டில் ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு மட்டுமே ரூ.405.77 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

எனவே, சீரான ரயில்கள் இயக்கத்துக்கு சிக்னல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், ஐரோப்பிய நாட்டின் சிக்னல் சிஸ்டம் நிலை -2 என்ற தொழில்நுட்பத்தை ரயில்வே யில் செயல்படுத்தவுள்ளது. இந்த சிக்னல் திட்டத்தை செயல்படுத்த ரூ.77 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், சிக்னல் அடிக்கடி பழுது ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும், பழுது ஏற்படும் இடத்தை துல்லியமாக அடையாளம் கண்டு உடனுக்குடன் தானியங்கி மூலம் சரிசெய்யவும் முடியும்’’ என்றனர்.

இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் மனோ கரன் கூறும்போது, “இந்தியன் ரயில்வேயில் புதிய வகை சொகுசு ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஏற்றார்போல் படிப்படியாக ரயில்களின் வேகம் 130 கி.மீ வரை அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அதிவேக ரயில்களை ஓட்டுவதில் தற்போதுள்ள தண்ட வாளங்கள், அதிக வளைவுகள் பெரிய சவாலாக இருக்கின்றன. அடுத்தது சிக்னல் தொழில்நுட்பம் முக்கிய பிரச்சினையாக இருக் கிறது. இதனால், ரயில்வே ஊழியர் களும், பயணிகளும் அவதிப்படு கின்றனர். எனவே, ரயில்வே தற்போதுள்ள திட்டமிட்டுள்ள புதிய சிக்னல் தொழில்நுட்பத்தை விரைவில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x