செய்திப்பிரிவு

Published : 19 Aug 2019 08:26 am

Updated : : 19 Aug 2019 08:26 am

 

பழமையான கார் கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

heritage-car-exhibition
மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் பாரம்பரிய கார்கள் கண்காட்சி சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது. இக்கண்காட்சியை நடிகை ரேவதி தொடங்கி வைத்தார். 1920 முதல் 1970 வரை புழக்கத்தில் இருந்த முன்னணி நிறுவனங்களின் 140-க்கும் மேற்பட்ட கார்கள், 40-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதில் பங்கேற்றன. படம்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னையில் நடைபெற்ற பழமை யான கார் கண்காட்சி பொது மக்களை கவர்ந்தது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் பழமை யான, புராதனமான கார் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சி நேற்று காலை நடைபெற்றது. கண்காட்சியை நடிகை ரேவதி தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் 1920 முதல் 1970 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயஸ், ஜாக்குவார், எம்ஜி. டார்ஜ், செவர்லெட், ஃபோர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற கார் நிறுவனங் களின் கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பயன்படுத்திய 1957-ம் ஆண்டு மாடல் டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவ னர் ஏவி மெய்யப்ப செட்டியார் பயன்படுத்திய 1938-ம் ஆண்டு மாடல் வாக்ஸால் கார், ஜெமினி ஸ்டூடியோஸ் அதிபர் வாசன் பயன்படுத்திய 1956-ம் ஆண்டு மாடல் வாக்ஸால் வெலாக்ஸ் போன்ற கார்களும் இருந்தன.

மேலும், 70 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அவசர ஊர்தி வாகனம், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்து, ஆங்கிலேயர்கள் பயன் படுத்திய சொகுசு கார்கள் என பல வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடக வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப்பின் சார்பில் 6 கார் களும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியில், மொத்தம் 140-க் கும் மேற்பட்ட கார்களும், 40-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங் களும் காட்சிக்கு நிறுத்தப்பட் டிருந்தன.

நேற்று விடுமுறை தினம் என்பதால் பலர் குடும்பத்துடன் வந்தனர். கார்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண் டனர். மேலும், ஆர்வமுடன் கார்கள் குறித்த தகவல்களையும் கேட்டறிந் தனர். இவ்வாறு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண் காட்சியைக் கண்டு ரசித்தனர்.

நிறைவாக, பார்வையாளர் களைக் கவர்ந்த வாகனத்துக்கும் பல்வேறு பிரிவுகளில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்துக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Heritage car exhibitionபழமையான கார் கண்காட்சி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author