Published : 19 Aug 2019 08:17 AM
Last Updated : 19 Aug 2019 08:17 AM

சென்னையில் முதன்முறையாக ‘ட்ரோன்’ மூலம் விநாயகர் ஊர்வலம் கண்காணிப்பு: ஒவ்வொரு சிலைக்கும் தனித்தனி காவலர் பாதுகாப்பு

இ.ராமகிருஷ்ணன்

சென்னை

சென்னையில் முதல் முறையாக விநாயகர் சிலை ஊர்வலம் ‘ட்ரோன்' கேமரா மூலம் கண் காணிக்கப்பட உள்ளது. பாது காப்பை பலப்படுத்தவும் கண் காணிப்பை தீவிரப்படுத்தவும் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 2-ம் தேதி கொண் டாடப்பட உள்ளது. இதை முன் னிட்டு சென்னையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உட்பட 30-க்கும் மேற் பட்ட அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் 2500-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்ட சிலை களை நிறுவி வழிபாடு நடத்தி பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப் படுகின்றன. இதற்காக சீனிவாச புரம் (பட்டினப்பாக்கம்), பல்கலை நகர் (நீலாங்கரை), காசிமேடு மீன்பிடி துறைமுகம், பாப்புலர் எடை மேடை பின்புறம் (திருவொற் றியூர்), ராமகிருஷ்ணா நகர் (எண் ணூர்) ஆகிய இடங்களில் சிலை களை கரைப்பதற்காக அனு மதிக்கப்பட்டுள்ளன.

தற்போது, விநாயகர் சிலை நிறுவுவதை எளிமைப்படுத்தும் விதமாக ஒற்றைச்சாளர முறையை போலீஸார் அறிமுகம் செய்துள்ள னர். அதன்படி, சிலை நிறுவுபவர் களோ அமைப்புகளோ காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநக ராட்சி, மின்சாரத் துறையிடம் சென்று தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தையும் போலீஸாரே கவனித்துக் கொள்வார்கள். இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும் அசம்பாவிதமின்றி ஊர்வலத்தை நடத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை காவல் (வட சென்னை) கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் கூறியதாவது:

விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக சிலை வைப்பவர்களை நேரில் அழைத்து ஆலோசிக்க உள்ளோம். சிலைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பும் தேவைப்பட்டால் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் நிறுத்தப்படுவார்கள். ஊர்வலத் தின்போது ஒவ்வொரு சிலைக்கும் தனித்தனி காவலர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

ஊர்வலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்படும். பிரச்சினைகளை தடுக்கும் வகை யில் சிலைகளை கரைக்க ஒவ் வொரு அமைப்புக்கும் தனித்தனி தேதி, நேரம், வழித்தடம் அமைத்துக் கொடுக்கப்படும்.

சென்னை வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய 4 காவல் மண்டலங்களிலும் தலா ஒரு ‘ட்ரோன்' கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம். சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x