Published : 19 Aug 2019 08:08 AM
Last Updated : 19 Aug 2019 08:08 AM

பக்தர்கள் வருகை அதிகரித்ததை சமாளித்ததுதான் பெரும் சவால்: அத்திவரதர் வைபவம் குறித்து காஞ்சி ஆட்சியர் பொன்னையா கருத்து

இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்

கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் மொத்தம் 3 லட்சம் பக்தர்கள்தான் வந்துள்ளனர். ஆனால் தற்போது நடைபெற்ற விழாவில் எதிர்பாராத அளவுக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு இருந்ததால் அதை சமாளிப் பது பெரிய சவாலாக இருந்தது என மாவட்ட ஆட்சியர் பா.பொன் னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று முடிந்துள் ளது. இந்த வைபவத்தை சிறப்பாக நடத்தி முடித்த மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

அத்திவரதர் வைபவம் என்ன மாதிரியான அனுபவத்தை உங்க ளுக்கு அளித்தது?

நிர்வாக மேலாண்மைக்கும், திறனுக்கும் மிகப்பெரிய அளவில் தீனிபோடும் வகையில் இந்த விழா அமைந்தது. ஒரே நேரத்தில் எல்லாத் துறைகளையும் ஒருங்கிணைத்து கூட்டாக செயல்பட வேண்டி இருந் தது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனுப்ப வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருந் தது. அதை 3 மணி நேரத்துக்குள் அவர்களுடன் விவாதித்து நாங் கள் வசதிகளை செய்து தர வேண்டும். இதுபோல் எல்லா துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டி இருந்தது.

விழாவில் உங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த விஷயம் எது?

எதிர்பார்த்ததைவிட மிக அதிகப் படியான பக்தர்கள் வந்ததுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் மொத்தமாக 3 லட்சம் பக்தர்கள்தான் பங்கேற் றதாக கூறப்பட்டது. எனவே, தற்போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வந்தாலும் அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம்.

ஆனால், சில நேரங்களில் ஒரே நாளில் மூன்றரை லட்சம் பக்தர்கள் வந்தனர். இதனால் வரும் பக்தர்ளை சமாளிப்பது, அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்வது பெரும் சவாலாக இருந்தது. இருந்தாலும் நாங்கள் பக்தர்களை சிரமப்படுத்தவில்லை. அதிகாரிகள் சிரமப்பட்டு உரிய வசதிகளை செய்து கொடுத்தோம்.

முக்கிய பிரமுகர்கள் பலர் வந்தனரே அவர்கள் என்னவிதமான கருத்துகளை உங்களிடம் கூறினர்?

பக்தர்கள் தரிசனத்துக்காக செய்யப்பட்டிருந்த வசதிகளை தமிழக முதல்வர் பாராட்டினார். மேலும் அதிகப்படியான குடிநீர் வசதியை ஏற்படுத்துவது, முதி யோர் வரிசையில் செல்லும்போது அவர்கள் அமர்ந்து செல்வதற்கு நாற்காலிகளை அமைப்பது, வருபவர்களுக்கு பந்தல் அமைத்து, அமர்ந்து செல்ல விரும்புபவர் களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். அவற்றையும் உடனுக்குடன் செய்தோம். உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி விழாவுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை பாராட்டினார். அமைச்சர்கள், நீதிபதிகள் பலர் வந்தனர் அவர்களும் பாராட்டினர்.

ஊழியர்கள் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

ஊழியர்கள் ஒத்துழைப்பு எல்லா துறையிலும் நன்றாக இருந்தது. உரிய அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் உள்ளே வருவது போன்ற சில நிகழ்வுகள் இருந்தன. அதை காவல்துறையினர் சரியாக கையாண்டனர். ஆனால், அவர்கள் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே வரும் சூழல் இருந்தது. பின்னர் அதையும் காவல்துறை அதிகாரிகள் சரி செய்தனர்.

இந்த விழா 1979-ம் ஆண்டு நடைபெற்றது குறித்து கேள்விப் பட்டிருக்கீறீர்களா?

அப்போது எனக்கு 11 வயது. 5-ம் வகுப்பு படித்து வந்தேன். இந்த விழா குறித்து அப்போது எனக்கு எதுவும் தெரியாது.

காவல்துறை அதிகாரி ஒருவரை நீங்கள் கண்டித்து சர்ச்சை ஆனது குறித்து?

உரிய அனுமதிச் சீட்டு இல்லாத பலர் அந்த இடத்தில் வந்து நின்றிருந்தனர். ஆன்-லைனில் பதிவு செய்தவர்கள் டிக்கெட் வைத்துள்ளவர்கள் உள்ளே போக முடியவில்லை. ஆனால், பலர் உரிய அனுமதி இல்லாமல் போகின்றனர் என்ற புகார் எழுந்தது. போலீஸார் அவர்களை தடுக்க முயன்றனர். அவர்கள் போலீஸாரையும் மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். சம்பந் தப்பட்ட ஆய்வாளர் உத்திரமேரூ ரில் நம்மிடம் பணி செய்துள்ளார். அவர் தடுத்தும் அவரையும் மீறி உள்ளே சென்றுள்ளனர்.

அங்கிருந்த போலீஸார் அனைவரும் சேர்ந்து 5 நிமிடங் களுக்கு ஒருமுறை உரிய அனு மதிச் சீட்டு இல்லாதவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந் தால், இந்த சர்ச்சை ஏற்பட்டிருக் காது. காவல் துறையினருக்கும் சிரமம் இருந்திருக்காது. வயதான இருவரை உள்ளே அனுமதித்ததால் நான் கண்டித்தேன் என்பதில் உண்மையில்லை.

காவல் துறையினர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதிச் சீட்டு இல்லாதவர்களை உள்ளே அனுமதித்ததாக புகார் எழுந் துள்ளதே?

ஒருசில நிகழ்வுகள் இருந்தன. அதை ஆரம்பக் கட்டத்திலேயே காவல் துறை அதிகாரிகள் சரி செய்துவிட்டனர். அனுமதிச் சீட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்தது, போலி பாஸ் அச்சடித்தது போன்றவை கடைசி நாட்களில் கூட்டம் அதி கரிக்க காரணம். இது தொடர் பாக 9 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. அப்போது கூட்டம் அதிகம் இருந்ததால் ஸ்கேன் செய்ய முடியாமல் அப்படியே அனுமதிச் சீட்டை கிழித்துள்ளனர்.

உங்கள் குடும்பத்தினர் அத்தி வரதரை தரிசித்தனரா?

தரிசித்தனர். என் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளும்படி கூறினர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x