

பொள்ளாச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வட்டத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டின் முதல் போக பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் கோரி விடுத்து வந்தனர். அணையின் நீர் இருப்பு மிக குறைந்த அளவே இருந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள PAP தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று அணையின் நீர்மட்டம் 92.30 அடிஅடியாக உயர்ந்தது. இதையடுத்து ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு தண்ணீர் திறந்த விட வேண்டும் என விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பொதுப்பணித் துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பினர்.
விவசாயிகளின் கோரிக்கையை இன்று ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடபட்டது, இன்று முதல் டிசம்பர் 31தேதி வரை 135நாட்களுக்கு 1059 மில்லியன் கன அடிக்கு குறைவு இல்லாமல், தினமும் 129 கன அடி முதல் பாசன நீர் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதனால் ஆனைமலை டெல்டா பகுதியில் உள்ள 6400 ஏக்கர் பாசன பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டபேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் , விவசாயிகள் பங்கேற்றனர். அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.