Published : 18 Aug 2019 11:45 AM
Last Updated : 18 Aug 2019 11:45 AM

விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கான உழவர் ஓய்வூதிய திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்?

விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை (மாதிரிப்படம்)

விழுப்புரம்

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கான பிரதமரின் சிறப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான பதிவு தமிழகம் தோறும் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் இத்திட்டத்தில் சேர விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்டமங்கலம் பொது சேவை மையத்தில் வேளாண் உதவி இயக் குநர் பெரியசாமி இத்திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் இத்திட்டம் குறித்து விளக்கி பேசுகையில், "இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பதிவு செய்ய லாம். 18 வயது உள்ளவர்கள் அரசு பங்குத் தொகை 55 ரூபாய் போக, மாதம் 55 ரூபாய் செலுத்தினால் போதும். 40 வயதுடையவர்கள் அரசு பங்குத்தொகை 200 ரூபாய் போக, மாதம் 200 ரூபாய் செலுத்தினால் போதும்.

இத்திட்டத்தில் சேரும் பயனாளி களுக்கு 60 வயதிற்கு மேல் மாதம் தோறும் 3,000 ரூபாய் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

இடையில் ஏதேனும் இயற்கையான இழப்புகள் நேர்ந் தால், கட்டியத் தொகையோடு வட்டியுடன் கூடிய முதிர்ச்சித் தொகையை வாரிசுகள் பெற வாய்ப்புள்ளது. ஓய்வூதியத் திட்டத்தை துவக்க விவசாயிகள் வங்கிப் புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை போன்ற விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் அளித்து பதிவு செய்யலாம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x