Published : 18 Aug 2019 11:42 AM
Last Updated : 18 Aug 2019 11:42 AM

நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்க கருத்துகேட்பு; மக்களின் கருத்தை கேட்க ஆர்வம் காட்டாத அதிகாரிகள்: கேள்விகளுக்கு பதிலில்லை; அவசரகதியில் நடந்த கூட்டம்

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் உருவாக்க நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத் தில் மக்களின் கருத்துகளை கேட்க அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை. அவசரகதியில் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம் உரு வாக்கப்படும் என்று, தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித் ததை தொடர்ந்து, தென்காசி மாவட் டத்தை உருவாக்க சிறப்பு அதிகாரி யாக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மாவட்டம் பிரிப்பது தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்களிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், சிறப்பு அதிகாரி அருண் சுந்தர் தயாளன், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சார் ஆட்சியர்கள் ஆகாஷ், மணீஷ் நாரணவரே, வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பங்கேற்றனர்.

மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச் சர் வி.எம். ராஜலெட்சுமி, திருநெல் வேலி மக்களவை உறுப்பினர் ஞான திரவியம், மாநிலங்களவை உறுப் பினர் விஜிலா சத்தியானந்த், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், முருகையா பாண்டி யன், இன்பதுரை, செல்வமோகன் தாஸ் பாண்டியன், மனோகரன் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப் பட்டது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரி வித்தனர். சங்கரன்கோவிலை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க கூடாது. அவ்வாறு இணைத்தால் சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டுதான் தென்காசி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டது.

ஆதரவு- முரண்பாடு

ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தாலுகாக்களை திருநெல்வேலியில் நீடிக்க செய்ய வேண்டும். அம்பாச முத்திரம் தாலுகாவை தென்காசி மாவட்டத்தில் இணைக்க வேண் டும். திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்க கூடாது. தென்காசி மாவட் டத்தை தொழில்துறையில் பின்தங் கிய மாவட்டமாக அறிவிக்க வேண் டும். திருநெல்வேலி மாவட்டத்தை சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரித்து இரு மாவட்டங்களாக்க வேண்டும் என்று பல்வேறு கருத்து கள் முரண்பாடாகவும், ஆதரவாக வும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் ஒரு படிவம் அளிக்கப்பட்டு, அவர் களது கருத்துகள் எழுதி வாங்கப் பட்டன. பிற்பகலில் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் இதுபோன்ற கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

அதிகாரிகள் மழுப்பல்

கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து சொல்ல பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்த வர்கள். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். பொதுமக்கள் தரப்பில் வெகுசிலரே வந்திருந்தனர். கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திய அதிகாரிகள், கருத்து சொல்பவர்களிடம் மனுக் களை வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை, அவர்களது கருத்து களை பொறுமையாக கேட்டு பதிவு செய்வதில் காட்டவில்லை. கருத்துகளை சொல்லுமாறு அவ சரப்படுத்தி, வந்திருந்தவர்களை கூட்ட அரங்கிலிருந்து வெளியேற்று வதில் அதிகாரிகள் குறியாக இருந் தனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய சமூக ஆர்வலர் முத்துராமன், “மாவட்டத்தை பிரிக்க அரசு எந்த வரையறையை வகுத்துள்ளது. நிர்வாக ரீதியாகவா அல்லது சட்டப் பேரவை தொகுதி ரீதியாகவா” என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதற்கு உரிய பதிலை அதிகாரிகள் தெரிவிக்காமல், கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்று அவரை பணித்தனர். மாவட் டத்தை பிரிக்க அரசு வகுத்துள்ள வரைமுறைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லிவிட்டு, அதில் நிறை, குறைகள், சாதக, பாதகங் கள் குறித்து மக்களிடம் கேட்டால் அவர்கள் உரிய கருத்துகளை தெரி விப்பார்கள். அவ்வாறு இல்லாமல் பொத்தாம் பொதுவாக கருத்து சொல்லுங்கள் என்று தெரிவித்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திய தால், அவரவருக்கு சவுகரியமாக கருத்துகளை எழுத்து பூர்வமாக வும், வாய்மொழியாகவும் தெரி வித்தனர்.

காரணம் என்ன?

தொடக்கத்தில் மக்கள் பிரதிநிதி களான எம்பிக்கள், எம்எல்ஏக்களின் கருத்துகளை அதிகாரிகள் கேட்ட றிந்த கூட்டத்தில் பங்கேற்க விடாமல் பத்திரிகையாளர்கள் வலுக்கட் டாயமாக வெளியேற்றப்பட்டனர். மக்கள் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்த வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கருத்து கேட்பு கூட்டத்துக்கு மக்கள் சிலரே வந்திருந்தனர். அவர்களின் கருத்துகளைக் கூட பொறுமையாக கேட்டு பதிவு செய்யாமல் அவசர கதியில் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

அரசுக்கு அறிக்கை

கூட்டத்துக்குப்பின் செய்தியா ளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், “கருத்து கேட்பு கூட்டத்தில் தெரி விக்கப்பட்ட கருத்துகளை பதிவு செய்து அரசுக்கு அறிக்கை அளிக் கப்படும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை அரசு தான் எடுக்கும். புதிய மாவட்டத்தை உருவாக்கு வதற்கான காலவரையறையை சொல்ல முடியாது” என்று தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x