Published : 18 Aug 2019 08:29 AM
Last Updated : 18 Aug 2019 08:29 AM

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பிரச்சார பயணம்: தேனியில் 20-ம் தேதி தொடங்குகிறார்

சென்னை

நியூட்ரினோ திட்டத்துக்கு எதி ராக 3 நாட்கள் பிரச்சாரப் பயணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரும் 20-ம் தேதி தொடங்குகிறார்.

இதுதொடர்பாக மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேனி மாவட்டத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல், நீர் நிலைகளை அழிக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.

நியூட்ரினோ எதிர்ப்பு இயக் கத்தைச் சேர்ந்த லெனின் ராஜப்பா, கி.வெ.பொன்னையன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர ராஜன், 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் உள்ளிட்டோர் வைகோவுடன் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற் கிறார்கள். மாலை 3.30 முதல் இரவு 9 மணி வரை இந்தப் பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது.

வரும் 20-ம் தேதி வடுகப்பட்டி, பெரியகுளம் வழியாக தேனி அல்லிநகரம், 21-ம் தேதி மாலை 3.30 மணிக்கு அரண்மனைப்புதூர், சின்னமனூர், குண்டல்நாயக் கன்பட்டி, 22-ம் தேதி போடி நாயக்கனூர், பண்ணைபுரம், கம்பம் வழியாக கூடலூரில் பிரச்சாரப் பயணத்தை வைகோ நிறைவு செய்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x