

மு.யுவராஜ்
சென்னை
குழந்தைகளின் நுண் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க சத்துண வில் செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல்கட்டமாக, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தைக்கு நுண் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவருகிறது. நுண் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு பலவீனமடைவதுடன் ரத்த சோகை போன்ற ஆபத்துகளும் ஏற்படும்.
எனவே, தமிழகத்தில் நுண் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், நுண் ஊட்டச்சத்து குறைபாட்டை முழுமையாக களைய முடியவில்லை.
தமிழகம் முழுவதும் 43,283 சத்துணவு மையங்களின் மூலம் 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டைக் களைய சத் துணவு மையங்களில் செறிவூட் டப்பட்ட அரிசியைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரிசி மாவில் பொடிகளாக மாற்றப்பட்ட வைட்டமின், இரும்பு சத்து, துத்தநாக சத்து, போலிக் அமிலத்தைக் கலந்து ஈரப்பதத்து டன் கூடிய கலவை உருவாக்கப் படும். அந்தக் கலவை இயந்திரம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும்.
இதன்படி, செறிவூட்டப்பட்ட அரிசியில் வைட்டமின் ஏ, வைட்ட மின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து ஆகிய 9 நுண் ஊட்டச்சத்துகள் அடங்கியுள் ளன.
சத்துணவில் செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்தும் திட் டத்தை அடுத்த மாதம் நடைமுறைப் படுத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை சமூகநலத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
நுண் ஊட்டச்சத்து குறைபாட் டில் இருந்து மாணவ, மாணவிய ரைப் பாதுகாக்க சத்துணவில் செறி வூட்டப்பட்ட அரிசியைப் பயன் படுத்த உள்ளோம். 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற வீதத்தில் சேர்க்கப்பட உள்ளது.
இதன்மூலம், மாணவ, மாண வியருக்கு நுண் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் களையப் படும். குறைபாடு இல்லாதவர்களும் இந்த அளவுகோலில் எடுத்து கொள்ளலாம்.
அடுத்த மாதம் தொடக்கம்
முதல்கட்டமாக தருமபுரி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் இத்திட்டத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடு களை செய்து வருகிறோம்
இதன் மூலம், 5 மாவட்டங் களில் சத்துணவு சாப்பிடும் 6.50 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவார்கள். இத்திட்டம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டால் தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.