புதுப்புது சட்டங்கள் இயற்றப்படும் நிலையில் இளம் வழக்கறிஞர்களுக்கு தொடர் சட்டக் கல்வி அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி கருத்து

புதுப்புது சட்டங்கள் இயற்றப்படும் நிலையில் இளம் வழக்கறிஞர்களுக்கு தொடர் சட்டக் கல்வி அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி கருத்து
Updated on
2 min read

சென்னை

இளம் வழக்கறிஞர்கள் வளர்ச்சி யடைய தொடர் சட்டக் கல்வி வழங்குவது அவசியம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி பங்கேற்று, பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் மற்றும் 22 உறுப் பினர்கள் ஆகியோருக்கு பதவிப் பிரம்மாணம் செய்துவைத்து, அதற் கான சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தேசத் தலைவர் கள் வழக்கறிஞர்கள் என்பதால், இத்தொழிலை செய்ய நாம் பெருமை கொள்ள வேண்டும். தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி என்.கிரு பாகரன் கூறினார். அவரின் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இளம் வழக்கறிஞர்கள் தவறு செய்யும்போது தொடக்கத்தில் அவர்களுக்கு அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் வழங்க வேண் டும். தொடக்கத்திலேயே நடவ டிக்கை எடுப்பதன் மூலம் இளம் வழக்கறிஞர்கள் பலர் வழக்கறிஞர் தொழில் செய்ய முடியாமல் அவர் களின் வாழ்க்கை பாழாகிறது. தொடக்கத்தில் தவறு செய்து, எச்சரிக்கைகளுக்கு உள்ளான வழக்கறிஞர்கள் பலர், பிற்காலத் தில் சிறந்த வழக்கறிஞர்களாக ஏற்றம் பெற்றுள்ளனர். அதனால், தொடர்ந்து தவறு செய்யும்போது மட்டுமே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது புதுப்புது சட்டங் கள் இயற்றப்படுகின்றன. பல சட் டத் திருத்தங்களும் மேற்கொள்ளப் படுகின்றன. வழக்கறிஞர்கள் தங் கள் தொழிலில் வளம் குன்றாமல் செயல்பட அவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள், இத்தொழிலில் வளர்ச்சி அடைய, அவர்களுக்கு தொடர் சட்டக் கல்வி வழங்குவது அவசியம். அதுதொடர்பான சட்ட பயிலரங்கங்களை பார் கவுன்சில் நடத்த வேண்டும். கேரளாவில் இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க தனி நீதித்துறை அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழகத்திலும் தொடங்க அரசு தலைமை வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்த கையேட்டை அச்சிட்டு அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:

இந்தியாவுக்கு 170 சட்டக் கல்லூரிகள் போதுமானது. ஆனால் 1500 கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் வெளிவருகின்றனர். அந்த அளவுக்கு இந்தியாவில் சட்ட வல்லுநர்கள் தேவையில்லை. அவ்வளவு வழக்குகளும் இல்லை.

வழக்கறிஞர் தொழிலுக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் விதிமீறல்களிலும் ஈடுபடும் வழக் கறிஞர்களை உடனடியாக சஸ் பெண்ட் செய்ய வேண்டும். தவறு செய்யும் வழக்கறிஞர்களை இந்த பார் கவுன்சில் கட்டிக்காக்கக் கூடாது. தட்டிவிட்டுவிட வேண் டும். அப்போதுதான் நீதிமன்றம் சிறப்பாக நடக்கும். மக்களுக் கும் தீர்வு கிடைக்கும்.

கிராமப் புற, நலிவடைந்த இளம் வழக் கறிஞர்களுக்கு பார் கவுன்சில் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு ஆங் கிலப் பயிற்சியும் வழங்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், டி.எஸ்.சிவஞானம், டி.ராஜா, ஆர்.சுப்பிரமணியன், என்.ஆனந்த் வெங்கடேஷ், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in