Published : 18 Aug 2019 08:09 AM
Last Updated : 18 Aug 2019 08:09 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பதை எளிமையாக்க சென்னையில் ஒற்றை சாளர முறை அறிமுகம்: ஆக. 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபடும் முறையை எளிமையாக்கும் வகையில் சென்னை போலீஸார் ஒற்றை சாளர முறையை முதன் முதலாக அறிமுகம் செய்துள்ள னர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், பொதுமக்கள், பக்தர்கள் என பல தரப்பினரும் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். ஒரு வார கால பூஜை, வழிபாட்டுக்குப் பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆண்டுதோறும் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்படும்.

அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட நினைப்பவர்கள் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மாநகராட்சி - நகராட்சி அமைப்புகள், மின்சாரத் துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடமிருந்து (நேரடியாகச் சென்று) முறையாக அனுமதி பெற்ற பின்னரே சிலைகளை வைப்பதற்கு முன்பு அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் சிலைகளை நிறுவுபவர் கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இந்தப் பிரச்சினையை போக்கும் வகை யில் ‘ஒற்றைச் சாளர முறை’ என்ற புதிய முறை சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் முதல் முறை யாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி விநாயகர் சிலைகளை நிறுவுபவர்களோ, நிறுவும் அமைப்புகளோ ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகச் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

விநாயகர் சிலைகளை நிறுவு பவர்கள், நிறுவும் அமைப்புகள் அந்தந்த காவல் மாவட்டத்துக்கு என நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை கொடுத்தால் போதுமானது. அந்த அதிகாரி அந்த மனுக்களைப் பெற்று மற்ற துறைகளி டம் இருந்து பெறவேண்டிய அனும தியை அந்தந்த துறைகளிடம் இருந்து அவரே பெற்று இறுதியில் விநாயகர் சிலைகளை நிறுவுபவர்களுக்கு, நிறு வும் அமைப்புகளுக்கு முறையான அனு மதியை வழங்குவார். இதனால் விநாய கர் சிலைகளை நிறுவுபவர்களுக்கோ, நிறுவும் அமைப்புகளுக்கோ எந்தவித சிரமமும் இருக்காது.

விநாயகர் சிலைகளை நிறுவ இருக்கும் அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள், கட்சிகள் இம்முறையைப் பின்பற்றி வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x