Published : 18 Aug 2019 08:06 AM
Last Updated : 18 Aug 2019 08:06 AM

உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்து விளங்கும் தமிழகம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் 

ஜெம் மருத்துவமனை சார்பில் கல்லீரல் அறுவை சிகிச்சை பற்றிய இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதில், ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன், தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, தைவான் தேசிய பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பேராசிரியர் யோ-மிங் வூ, மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

ஜெம் மருத்துவமனை சார்பில் கல்லீரல் அறுவை சிகிச்சை பற்றிய 2 நாள் சர்வதேச கருத்தரங்கின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. மருத்துவ மனை தலைவர் டாக்டர் சி.பழனி வேலு விழாவுக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத் தரங்கையும், மருத்துவமனையின் பல்லுறுப்பு மாற்று மையத்தையும் தொடங்கி வைத்தார். மருத்துவ மனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசோகன், இயக் குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசிய தாவது:

தற்போதுள்ள உணவு பழக்க வழக்கங்களால் கல்லீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன. சுகாதாரமான உணவு களை சாப்பிடுவதுடன், தினமும் உடற்பயிற்சி செய்வதை அவசிய மாக்கிக் கொள்ள வேண்டும். மருத்துவ சுற்றுலாவாக தமிழகத் துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் காப்பீட்டுத் திட் டத்தில் இதுவரை நாடு முழுவதும் 50 கோடி ஏழை மக்கள் பயன டைந்துள்ளனர். உடல் உறுப்புகள் தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்வதை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெம் மருத்துவமனையின் தலை வர் சி.பழனிவேலு பேசும்போது, “சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கல்லீரல் அறுவை சிகிச்சை மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50-க் கும் மேற்பட்ட வல்லுநர்கள், 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, ஜப்பான், தைவான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நவீன அறிவியல் முன்னேற்றம், புதிய அறுவை சிகிச்சை குறித்து விளக்கமளித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x