பல்வேறு அரசுத் துறைகள் மூலம் அத்திவரதர் வைபவத்துக்கு ரூ. 44 கோடி செலவு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தகவல்

பல்வேறு அரசுத் துறைகள் மூலம் அத்திவரதர் வைபவத்துக்கு ரூ. 44 கோடி செலவு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தகவல்
Updated on
2 min read

ஆர்.ஜெயப்பிரகாஷ்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்துக்கு ஏற்கெனவே ரூ.29 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இது தவிர்த்து பல்வேறு துறைகள் மூலம் சுமார் ரூ.15 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அத்திவரதர் வைபவம் ஜூலை 1-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. பொது தரிசனத்தின் கடைசி நாளான ஆக. 16-ம் தேதி இரவு தொடர்ந்து அதி காலை 2.30 மணி வரை தரிசனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அத்திவரதரை அனந்தசரஸ் குளத் தில் சயனிக்க வைப்பதற்கான சம் பிரதாய சடங்குகள் நிறைவேற்றப் படும்.

அத்திவரதரை தேவராஜ சுவாமி உற்சவர் தரிசித்த பின்பு அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதரை சயனிக்கச் செய்யும் நிகழ்வு நடைபெறும். இதுவரை அத்தி வரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்துள்ளனர். இறுதி நாளில் பட்டர்கள், ஸ்தானிகர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் தரிசித்தனர்.

இந்த வைபவத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணி யாற்றிய அனைவருக்கும், காஞ்சி பொது மக்களுக்கும் தமிழக முதல் வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். எங்களோடு இணைந்து பணியாற் றிய அனைத்து துறை அலுவலர் களுக்கும் நாங்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வைபவத்தையொட்டி உண்டியல் காணிக்கை எண்ணப் பட்டவரை ரூ.7 கோடி வந்துள் ளது. நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள அரும்பாடுபட்ட துப்புரவு பணியாளர்கள் இன்னும் 2 நாட் கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து தூய்மைப் பணிகளை மேற்கொள் வார்கள். சாலைகள் சீரமைப்பு பணிகள் 15 நாட்களில் நிறைவு பெறும்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. அந்தக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பக்தர்கள் விட்டுச் சென்ற காலணிகளில் சிறிதளவு ஆதரவற்றோர் இல்லங் களுக்கு வழங்கப்படும். எஞ்சியவை நகராட்சி மூலம் ஏலம் விடப்படும்.

அத்திவரதர் சயனிக்க உள்ள அனந்தசரஸ் குளத்தைச் சுற்றி 2 மாதங்கள் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கண்காணிப்பு கேம ராக்களும் பொருத்தப்பட உள்ளன.

46 தனியார் நிறுவனங்களுக்கு அன்னதான திட்டத்தில் பங்கு பெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வசூலித்த நன்கொடை எவ்வளவு? அவர்கள் எவ்வளவு உணவு அளித்துள்ளார்கள் என்கிற விவரம் 2 நாட்களில் தெரிய வரும்.

மேற்கு ராஜகோபுரத்தில் உள்ள தடுப்புகள் உடனடியாக அகற்றப்படும். இன்று முதல் மூலவர் தேவராஜ சுவாமியை பக்தர்கள் தரிசிக்கலாம். போலி சிறப்பு அனு மதி அட்டைகள் அச்சடித்தது தொடர் பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அத்திவரதர் வைபவத் துக்கு ஏற்கெனவே ரூ.29 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. மேலும் மூலம் சுமார் ரூ.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முழுமையான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். அத்திவரதர் சயனிக்கும் இடத்தில் தற்போது 2019-ல் இந்த வைபவம் நடைபெற்றது தொடர்பான கல்வெட்டு அமைப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்யும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in