தமிழக பாஜகவுக்கு டிச. 15-க்குள் புதிய தலைவர்: இல.கணேசன் தகவல்

தமிழக பாஜகவுக்கு டிச. 15-க்குள் புதிய தலைவர்: இல.கணேசன் தகவல்
Updated on
1 min read

கும்பகோணம்

டிசம்பர் மாதம் 15-ம் தேதிக் குள் தமிழக பாஜக.வுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் பாஜக திருச்சி பெருங் கோட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ் சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கலந்துகொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பி னர் இல.கணேசன், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தலை நடத்தி முடித்து, இந்த ஆண்டுக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் தமிழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவிலேயே அதிக உறுப் பினர்கள் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுக்கும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் வெற்றி பெறுவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவருவோம் என உறுதி எடுத்தோம். அதன்படி தற்போது ஊழலை ஒழித்துவிட்டோம். தற்போது ஊழல்வாதிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். நாங்கள் அனைத்தி லும் வெற்றி பெறுவோம் என் றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in