Published : 17 Jul 2015 09:30 AM
Last Updated : 17 Jul 2015 09:30 AM

கடலூரில் நாளை திமுக பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: 10 மாவட்ட தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் திமுக சார்பாக நாளை (18-ம் தேதி) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேச இருக்கிறார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை திமுக ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த மே 24-ம் தேதி மதுரையில் 18 திமுக மாவட்ட செயலாளர்களின் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது. அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 10 மாவட்டங் களுக்கு உட்பட்ட கட்சி ரீதியான 17 மாவட்ட திமுக சார்பாக கடலூரில் நாளை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதி கேட்கும் பேரணி என்ற தலைப்பிலான இந்த பொதுக் கூட்டத்துக்கு கடலூர்-சிதம்பரம் சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் 125 ஏக்கர் பரப்பில் பொதுக்கூட்ட திடல் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்ட ஏற்பாடுகளை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலா ளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், தஞ்சை மாவட்ட செய லாளர் சந்திரசேகர், புதுச்சேரி வடக்கு மாநில செயலாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்ளிட் டோர் பார்வையிட்டனர். இதன் தொடர்ச்சி யாக, பொதுக்கூட்டம் குறித்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று கூறியதாவது:

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத் தில் திமுக திறந்தவெளி பொது கூட்டம் 18-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். பொதுக் கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டத்தில் முட்டம், பச்சயாங்குப்பம், விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட பாலங்களுக்கு அதிமுக ஆட்சியில் தொடக்க விழா நடைபெறுகிறது. கடலூரில் திமுக ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x