Published : 17 Aug 2019 08:20 AM
Last Updated : 17 Aug 2019 08:20 AM

டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 30 நாட்களுக்கு முறை வைக்காமல் திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருச்சி முக்கொம்பு மேலணையை நேற்று கடந்து சென்ற காவிரி நீர்.படம். ஜி.ஞானவேல்முருகன்

தஞ்சாவூர்

காவிரி டெல்டா விவசாயிகளின் சம்பா சாகுபடி பாசனத்துக்காக கல்லணை இன்று (ஆக.17) திறக்கப்படுகிறது. ஏரி, குளங்களை நிரப்பும் விதமாக 30 நாட்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் முழுவதும் நிரம்பின. இதையடுத்து, அணை களுக்கு வரும் உபரிநீர் தமிழகத் துக்கு திறக்கப்படுவதால், மேட் டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 112 அடியாக இருந்தது. விரைவில் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என்ற நிலை உள்ளது.

இதையடுத்து, கடந்த 13-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார். விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி என திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை திருச்சி முக்கொம்பு மேலணையை வந்த டைந்தது.

இதையடுத்து, அங்கிருந்து நேற்று நள்ளிரவு கல்லணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதற் காக கல்லணையில் உள்ள 116 ரெகுலேட்டர்களும் சீரமைக்கப் பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று (ஆக.17) காலை 11 மணிக்கு கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

கல்லணையில் நடைபெறவுள்ள தண்ணீர் திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்மை, பொதுப்பணித் துறையினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

முறை வைக்காமல் தண்ணீர்

கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் முழுக் கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீரைத் திறந்தால்தான் பேரா வூரணி, அறந்தாங்கி, பட்டுக் கோட்டை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் தட்டுப் பாடின்றி கிடைக்கும். முறை வைக் காமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் வந்தால்தான் ஏரி, குளங் களை நிரப்ப முடியும். எனவே, கடைமடைக்கு விரைந்து செல்லும் வகையில் தண்ணீரைத் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x