Published : 17 Aug 2019 08:01 AM
Last Updated : 17 Aug 2019 08:01 AM

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் செப்.12-ம் தேதி தொடக்கம்

சென்னை

பள்ளிக்கல்வித் துறை வெளியிட் டுள்ள அறிவிப்பு:

நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப். 12-ல் தொடங்கி 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற் கான அட்டவணை மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள் வாயி லாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ளது. இதன்படி அனைத்து பள்ளிகளும் 10, 12-ம் வகுப்பு களுக்கு காலையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மதியமும் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

தேர்வு விவரம்

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு களுக்கு செப்டம்பர் 12-ம் தேதி மொழிப்பாடம், 13-ம் தேதி ஆங்கிலம், 16-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், உயிரி வேதியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, நர்ஸிங், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, விவசாய அறிவியல், 17-ம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், அரசியல் அறிவியல், புள்ளியியல், மனை அறிவியல், நுண்ணுயிரியல், 19-ம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், 21-ம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம், தொழிற்கல்வி படிப்புகள், 23-ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெறும்.

10-ம் வகுப்பு தேர்வு

10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 12-ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், 13-ம் தேதி மொழிப்பாடம் இரண்டாம் தாள், 16-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 17-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 18-ம் தேதி விருப்ப மொழித் தேர்வு, 19-ம் தேதி கணிதம், 21-ம் தேதி அறிவியல், 23-ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடத் தேர்வுகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x