Published : 17 Aug 2019 07:56 AM
Last Updated : 17 Aug 2019 07:56 AM

கடற்படை பாதுகாப்பு பணிக்காக 2 செயற்கை கோள்கள்: இஸ்ரோ உதவியுடன் விண்ணில் செலுத்த மத்திய அரசு திட்டம்; முதல்கட்டமாக ஜிசாட் - 7ஆர் செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது

சி.பிரதாப்

சென்னை

கடற்படை பாதுகாப்பு பணிக்காக இஸ்ரோ உதவியுடன் 2 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2009-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் தொழில்நுட்ப வசதிகள் மூலம் அண்டை நாடுகள் மற்றும் எல்லை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இஸ்ரோ உதவியுடன் ராணுவ கண்காணிப்பு பணிக்காக இந்த ஆண்டுக்குள் 8 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.

அதில் மைக்ரோசாட் ஆர், எமிசாட், ரிசாட் -2பி ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வெற்றி கரமாக ஏவப்பட்டுவிட்டன. மீத முள்ள செயற்கைக்கோள்கள் அடுத்த ஓராண்டுக்குள் படிப்படி யாக செலுத்தப்பட உள்ளன. இது தவிர கடற்படை சார்பாகவும் 2 செயற் கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ் ஞானிகள் கூறியதாவது:

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவில் சுமுகநிலை இல்லாததால் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கி றோம். அதன் ஒருபகுதியாக எல்லை கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் உளவுப் பணி களுக்காக மைக்ரோசாட் ஆர், எமிசாட், ரிசாட் -2பி ஆகிய 3 செயற்கைக்கோள்கள் செலுத்தப் பட்டன. மேலும் 5 செயற்கைக் கோள்கள் அடுத்தடுத்து ஏவப் பட உள்ளன.

இவையெல்லாம் இரட்டை பயன்பாடு கொண்டவையாக இருக் கும். அதாவது புவி கண்காணிப்பு பணிகளுடன் நம் நாட்டின் பாது காப்புக்கு தேவையான செயல் பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. இதுதவிர தரையில் இருந்து ஏவுகணை மூலம் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி திட்டமும் கடந்த மார்ச் மாதம் வெற்றிகரமாக ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. அந்தவகையில் அடுத்தகட்டமாக கடற்படையின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக 2 அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களை 2022-ம் ஆண்டுக்குள் செலுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இவை முழுவதும் கடற்படை யின் கட்டுப்பாட்டிலேயே இயங் கும். அதற்கு ஏதுவாக செயற்கைக் கோளுடனான தகவல் பரிமாற்றத் துக்கு தேவையான தொடர்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக் கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்த திட்டத்துக்கு ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஜிசாட்-7ஆர் செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கு முன் 2013-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. அதற்கு மாற்றாக ஜிசாட்-7ஆர் நிலைநிறுத்தப்பட உள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-7 ஆர் மூலம் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளை முழுமையாகவும், இந்திய பெருங்கடலில் 80 சதவீத பரப்பளவையும் நம்மால் ஆய்வு செய்ய முடியும். இது அனைத்து விதமான போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், நீர்முழ்கி கப்பல் கள் மற்றும் தரை கட்டுப்பாட்டு மையங்கள் இடையேயான ஒருங் கிணைந்த தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும்.

போர்க்காலங்களில் இந்த செயற்கைக் கோளில் இருந்து கடற்படையினர் நேரடியாகவே தகவல்களை பெறலாம். இதனால் காலவிரயம் தவிர்க்கப்படும். எதிரி நாடுகளின் கடல்வழி ஊடுருவலை துல்லியமாக கண்காணிக்கலாம்.

இதைத்தொடர்ந்து அடுத்து விண்ணில் ஏவப்பட உள்ள செயற்கைகோள்கள் மூலம் இந்த சேவையின் பலன்கள் பலமடங்கு அதிகரிக்கும். மேலும், நம்நாட்டின் பாதுகாப்புக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x