

சென்னை
நகர்ப்புறப் பகுதிகளில் பத்திரப் பதிவு செய்ததும் பட்டா மாறு தலுக்கான படிவங்களை கணினி மூலம் மாற்றம் செய்யும் ‘ஸ்டார் 2.0’ மென்பொருள் விரிவாக்க திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூரில் ரூ.90 லட்சம் மதிப் பில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலக கட்டிடம், திருவண்ணா மலை மாவட்டம் கீழ்பெண்ணாத் தூரில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
பதிவுத்துறையில் ஆவணப் பதிவுகளை முற்றிலும் கணினி மயமாக்கும் ‘ஸ்டார் 2.0’ மென் பொருள், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புறங்களில் பத்திரப்பதிவு செய்ததும் பட்டா மாறுதலுக்கு தேவையான படிவங்கள் கணினி மூலம் வருவாய்த் துறைக்கு அனுப் பப்படுகிறது. இந்த வசதியை நகர்ப்புற மக்களுக்கும் விரிவு படுத்தும் நோக்கில், ஸ்டார் 2.0 மென் பொருள் விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
காலதாமதம் தவிர்க்கப்படும்
இதன்மூலம் நகர்ப்புறப் பகுதி களில் பத்திரப்பதிவு செய்ததும் பட்டா மாறுதலுக்கு தேவையான படிவங்கள் சம்பந்தப்பட்ட வரு வாய்த் துறை அலுவலகங்களுக்கு கணினி மூலம் அனுப்பப்படும். இதனால், பட்டா மாறுதலுக்கான காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன், பணிகளும் விரைவாக நடக்கும்.
வணிக வரி அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிக் கவும், பாதுகாப்பு கருதியும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 9 வணிகவரித் துறை அலுவலகங்களில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல் பாடுகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கே.சண்முகம், வணிகவரித் துறை செயலர் பாலச் சந்திரன், வணிகவரி ஆணையர் சோமநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.