பள்ளிகளில் மாணவர்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பின்பற்ற எந்த தடையும் இல்லை: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை

பள்ளிகளில் மாணவர்கள் சாதிய குறியீடு கொண்ட கயிறுகளை அணிய மட்டுமே தடை விதிக்கப் பட்டுள்ளது. சுவாமி கயிறு உட்பட நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் மாணவர் கள் இடையே சாதிரீதியான நடவ டிக்கைகள், மோதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தடுக்கும் விதமாக சாதி குறியீடு கொண்ட கயிறுகளை அணிய பள்ளிக்கல் வித் துறை சார்பில் தடை விதிக் கப்பட்டதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் விவகாரம் சர்ச்சையானது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகளில் சாதியை முன் வைத்து மேற்கொள்ளப்படும் நடவ டிக்கைகளை தடுக்கவே கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப் பப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் அனைத்து மாணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். மாணவர் கள் தங்களுக்குள் எந்தவித ஏற்றத் தாழ்வும் இல்லாமல் சகோதர உணர்வுடன் பழகி சமூக நல்லி ணக்கத்துக்கு இலக்கணமாக திகழ வேண்டியது அவசியம்.

அதற்கு மாறாக சாதி, மத உணர்வுகளை கையில் எடுத்து தவறான செயல்பாடுகளில் ஈடுபடு வதை ஏற்க முடியாது. அதனால் தான் பல்வேறு வண்ணங்களில் சாதிய குறியீடு கொண்ட கயிறு களை அணியவும், திலகமிடவும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரம் பாரம்பரியமாக பின்பற்றப்படும் சுவாமி கயிறு அணிதல், திருநீறு, சந்தனம் பூசுதல், மாலை அணி தல், காப்புக்கட்டுதல், முடி வளர்த் தல் போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மாணவர்கள் பின் பற்ற எந்தத் தடையும் இல்லை. எனினும், மத, சாதி பாகுபாடு காட்டும் விதமாக ஆசிரியர்கள், மாணவர்கள் எந்த செயல்களை முன்னெடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in